50 புதிய வாழ்க்கை

1K 61 13
                                    

50 புதிய வாழ்க்கை

மறுநாள் காலை

காலை எழுந்தவுடன் சமையலை துவங்கி விட்டாள் இளந்தென்றல். அவளது கை மனதில் தயாரான பாயசத்தின் வாசனை, சாராவை சமையலறைக்கு அழைத்து வந்தது.

"இந்த வாசனையே என்னை சாப்பிட சொல்லி தூண்டுது" என்றார் சாரா.

"அதே தான்" என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய பொழுது, அங்கு புன்னகையுடன் நின்றிருந்தான் பரஞ்ஜோதி.

"தாராளமா சாப்பிடுங்கண்ணா" என்றாள் இளந்தென்றல்.

"பாவம், மல்லனால இதை சாப்பிட முடியாதுல்ல?"

"அவருக்கு சுகர் ஃப்ரீ பாயாசம் ரெடியா இருக்கு"

"ஓ சூப்பர்... "

அவர்கள் இருவருக்கும் பாயசத்தை கிண்ணங்களில் ஊற்றி கொடுத்தாள் இளந்தென்றல். சுகர் ஃப்ரீ கொண்டு சமைக்கப்பட்ட பாயசத்தை எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றாள் இளந்தென்றல். அங்கு மாமல்லன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். பாயச கிண்ணத்தை மேசையின் மீது வைத்து விட்டு, அவன் அருகில் அமர்ந்து மெல்ல அவன் தலையை வருடி கொடுத்தாள். அவள் கரத்தைப் பற்றி தன்னிடம் இழுத்துக் கொண்டான் மாமல்லன்.

"என்ன வேலை இது? என்னை விடுங்க"

"ஷ்ஷ்ஷ்... அதையெல்லாம் சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல. இப்போ நீ எனக்கு சொந்தம்... ஞாபகத்துல வச்சுக்கோ"

"இன்னைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னீங்களே, மறந்துட்டீங்களா?"

"நான் மறக்கல..."

"அப்படின்னா போய் ரெடி ஆகுங்க. குளிச்சிட்டு வந்து, நான் செஞ்ச பாயசத்தை சாப்பிடுங்க"

"எனக்கு பாயசம் வேண்டாம். கேரட் அல்வா தான் வேணும்" என்றான் ரகசியமாக.

"சாயங்காலம் செஞ்சு தரேன்" என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.

"வேண்டாம், நீ என் கூட இரு. போதும். நானே எடுத்துக்குவேன்"

தன் வெட்க புன்னகையை மறைக்க போராடினாள் இளந்தென்றல். அவள் புதிதாய் அணிந்திருந்த மஞ்சள் தாலியும், அவள் நெற்றி வகிட்டை நிரப்பியிருந்த குங்குமமும், அவளை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கொள்ளை அழகாய் காட்டியது.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️حيث تعيش القصص. اكتشف الآن