18 நிச்சயதார்த்தம்?

879 64 13
                                    

18 நிச்சயதார்த்தம்?

அன்று மாலை

சமையலறைக்கு சென்ற இளந்தென்றல், பைனாப்பிள் கேசரி செய்ய துவங்கினாள். தன் அம்மாவின் அறுவைசிகிச்சை நல்லபடியாக முடிந்து விட்டதற்காக, அன்று பூஜையில் வைத்து படைக்க அதை அவள் சமைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த பைனாப்பிள் கேசரியில் இருந்து எழுந்த வாசம், மாமல்லனின் இல்லமான *மல்லை* இதற்கு முன் எப்பொழுதும் நுகர்ந்திராதது...! அவனுடைய அம்மா *காதம்பரி* சமைத்த போது கூட, மல்லையில் இப்படி ஒரு வாசம் வீசியதில்லை. அந்த வாசம், இனிப்பு சுவையை சுமந்து வந்து, வீடு எங்கும் மனம் பரப்பியது. அது மல்லையின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்று சேர்ந்தது. அது மாமல்லனை சமையலறை நோக்கி இழுத்து வந்தது. இளந்தென்றல் ஒரு பெரிய பாத்திரத்தில் கேசரியை சமைத்துக் கொண்டிருந்ததை பார்த்து, மாமல்லனின் கண்கள் வியப்பில் விரிந்தன.

"நீ சென்னையில ஸ்வீட் கடை ஆரம்பிக்க போறியா?" என்றான்.

வழக்கமாய், மாமல்லன் சமையல் அறைக்கு வந்தால், அவள் சமைத்துக் கொண்டிருப்பதை சுவை பார்ப்பது தான் அவனுடைய வழக்கம். ஆனால், இன்று அவன், அவள் சமைத்த பைனாப்பிள் கேசரியை தொட்டுப் பார்க்காமல் நின்றதை பார்த்தபோது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

"கடையா? கடை நடத்த இவ்வளவு கொஞ்சமாவா சமைப்பாங்க? இது எனக்கே பத்தாது..." என்றாளே பார்க்கலாம்...

அது மாமல்லனை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

"இவ்வளவையும் நீ உன் ஒருத்திக்காகவா சமைச்சுக்கிட்டு இருக்க? இவ்வளவு ஸ்வீட் சாப்பிடுவியா நீ?" என்றான் நம்ப முடியாமல்.

"அவ்வளவு ஒன்னும் நிறைய செய்யலையே... இதை வெறும் அரை கிலோ ரவையில தானே செஞ்சிருக்கேன்..." என்றாள் கூலாக.

"ஸ்வீட் நிறைய சாப்பிட்டா நிறைய வெயிட் போடும்னு கேள்விப்பட்டிருக்கேன். உன்னை பார்த்தா, நீ இவ்வளவு ஸ்வீட் சாப்பிடுற ஆளுன்னு யாரும் சொல்ல முடியாது" என்று சிரித்தான் மாமல்லன். 

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now