39 காத்திருந்த அதிர்ச்சி

875 59 11
                                    

39 காத்திருந்த அதிர்ச்சி

இளந்தென்றல் மதுரைக்கு செல்ல தயாரானாள். அவளது அறைக்கு வந்த மாமல்லன், அவள் முழுவதும் தயாரான நிலையில் கண்ணாடியின் முன் நின்று தன்னை சரி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். முதல் நாள் அவன் அவளுக்கு பரிசளித்த புடவையை அவள் அணிந்திருந்தாள். புடவையில் அவள் மிக அழகாய் இருந்தாள்... மொத்தமாய் மாறிப் போயிருந்தாள். அவர்களுக்கு திருமணம் நடந்த நாளென்றே அவன் அதை கவனித்திருந்தான். ஆனால், அன்று அவளை ரசிக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கவில்லை. அன்று நடந்த நிகழ்வுகள், அவனுக்கு அந்த மனோ நிலையை அளிக்கவில்லை.

கண்ணாடியின் வழியாக அவனைப் பார்த்த இளந்தென்றல் புன்னகை புரிந்தாள். அவளது புன்னகை சம்பிரதாயமாய் இருந்ததே தவிர, அது அவளது கண்களை சென்று சேரவில்லை. அவள் புன்னகைத்த போதும், தன்னை மறந்து நின்றிருந்தான் மாமல்லன். அவனிடம் சென்று அவனது தோளை லேசாய் தட்டினாள் இளந்தென்றல். *புடவை* உலகத்தில் இருந்து வெளியே வந்தான் மாமல்லன்.

"உங்க கவனம் எங்கு இருக்கு?"

"உன்னோட புடவையில தான்..."

புன்னகையுடன் மீண்டும் கண்ணாடியின் முன் சென்றாள் இளந்தென்றல். அவளை பின்தொடர்ந்து வந்த மாமல்லன்,

"நீ புடவையில் ரொம்ப அழகா இருக்க" என்றான்.

அவனை நோக்கி ஒரு குங்கும சிமிழை நீட்டிய அவள்,

"இதை என் வகிட்டில் வச்சு விடுங்க" என்றாள்.

"நீ உங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான் ஆச்சரியமடைந்த மாமல்லன்.

"இருக்கு. அதனால?"

"அவங்க இந்த குங்குமத்தை பார்த்து ஏதாவது கேட்டா என்ன செய்வ?"

"நான் சமாளிச்சுக்குவேன்"

"நெஜமாத் தான் சொல்றியா?"

"ஆமாம்"

வேண்டாம் என்று கூறி அவளை வருத்தப்பட செய்ய அவன் தயாராக இல்லை. ஏனென்றால் இது பெண்களின் சென்டிமென்ட் சம்பந்தப்பட்ட விஷயம். சிறு துளி குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்து நிரப்பினான் மாமல்லன்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now