32 நண்பன் யார்?

803 66 15
                                    

31 நன்பன் யார்?

தனது அறைக்கு வந்த பின்னும், பொருள்களை போட்டு உடைப்பதை நிறுத்தவில்லை மாமல்லன். அவனது மனைவி, அவன் கட்டிய தாலியை அவிழ்த்து விட்டாள். அவள் தன்னையே தூக்கி எறிந்துவிட்டது போல் இருந்தது அவனுக்கு. அந்த எண்ணமே அவனைக் கொன்றது. திருமணம் கூட அவளை தன்னிடம் நிறுத்தவில்லை என்றால், வேறு எது தான் அவளை தன்னிடம் கொண்டு வந்து நிறுத்தும்? அவள் அதற்கு கூட முக்கியத்துவம் வழங்கவில்லையே...

அவனுக்கு மிகவும் களைப்பாய் இருந்தது. ஜுரம் நெருப்பாய் கொதித்த போதும், அவனுக்கு வீட்டில் இருக்க தோன்றவில்லை.

*நம்பிக்கை* என்பது, மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. நம்பிக்கை இருந்தால், கல்லிலும் கூட கடவுளை காணலாம். நம்பிக்கை இல்லாவிட்டால், கடவுளே நேரில் வந்தாலும் கூட மனம் ஒப்புக் கொள்ளாது. இளந்தென்றல், இதில் முதல் வகையை சேர்ந்தவள். கடவுள் மீதும், விதியிலும் நம்பிக்கை உள்ளவள். எல்லாவற்றிற்கும் மேலாக, நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதிப்பவள். ஆனால் இந்த விஷயத்தில் அவளது நிலைப்பாடு என்ன? அவள் இந்த திருமணத்தை மதிக்கவில்லையா?

நொறுங்கி போனான் மாமல்லன். அவள் மாங்கல்யத்தை அவிழ்த்து விட்டாள் என்ற எண்ணம் அவனை துன்புறுத்தியது. எந்த உணர்வுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அவள் அதை செய்துவிட்டாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. இன்னும் கூட, அவள் தனது நிச்சயதார்த்தத்தில் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறாளா? என்ன பிதற்றல் இது?

அலுவலகம் செல்ல தயாரான நிலையில், தரைதளம் வந்தான் மாமல்லன். இளந்தென்றல் அங்கு அமர்ந்து கொண்டு, எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் வந்ததை கூட அவள் கவனிக்கவில்லை. அவளை பார்த்தபடி, சற்று நேரம் அங்கு நின்றான் அவன். அவளுடைய நிலை, அவனுக்கு புரிந்து தான் இருந்தது. அவள் இடத்தில் எந்த பெண் இருந்தாலும் அவள் இப்படித் தான் இருப்பாள். ஆனால், இவள் இளந்தென்றலாயிற்றே...! அவள் விரும்பினால், இதிலிருந்து அவளால் வெளியே வர முடியாதா? விரும்பினால் தானே? அவள் விரும்புவாளா? அவனிடம் வரவேண்டும் என்று அவள் விரும்புவது சாத்தியமா? அதற்கு மேல் ஒன்றும் யோசிக்காமல் அங்கிருந்து சென்றான் மாமல்லன்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now