45 சந்திப்பு

773 61 11
                                    

45 சந்திப்பு

கடுமையான கோபத்துடன் வீட்டினுள்  நுழைந்தான் மாமல்லன். நிம்மதி இழந்து காணப்பட்ட அவனது முகத்தை பார்த்தவுடனேயே பரஞ்ஜோதிக்கு புரிந்து போனது, இளந்தென்றலின் வீட்டில் ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பது.

"என்ன ஆச்சு மல்லா?"

"ஷீலா அவளுடைய கேவலமான ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா. கோதை ஆன்ட்டிக்கும், பாட்டிக்கும், இளந்தென்றல் என் வீட்டில் தான் தங்கி இருந்தா அப்படிங்கற உண்மை தெரிஞ்சு போச்சு"

"அடக்கடவுளே..."

"எல்லா பழியையும்  என் தலையில போட்டுக்கிட்டு, எப்படியோ நான் விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டேன்"

"அவங்க எப்படி ரியாக்ட் பண்ணாங்க?"

"அம்மாவுடைய லெட்டர் என்னை காப்பாத்திடுச்சி"

"தேங்க் காட்..."

"நம்ம இதுக்கு ஏதாவது செஞ்சாகணும் பரா. ஷீலா தானா வந்து மாட்டுவான்னு நம்ம சும்மா இருக்க கூடாது. நம்ம ஏன் அவளுடைய வாய்ஸை ட்ரேஸ் பண்ண கூடாது? நம்மளுடைய பிரசன்டேஷன் ஏதாவது ஒண்ணுத்துல நிச்சயம் அவளோட வாய்ஸ் ரெக்கார்டிங் இருக்கும்."

"நல்ல ஐடியா"

"இன்னைக்கே பண்ணிடு"

"ஓகே"

.....

தென்றலின் வாடிய முகத்தை கண்ட கோதை,

"தென்றல்..." என்று அவளை அழைத்தார்.

"என்னங்கம்மா?"

"இங்கே வா"

அவர் அருகில் வந்து முழங்காலிட்டு அமர்ந்தாள் தென்றல்.

"என் மேல வருத்தமா?"

"என்னை மன்னிச்சிடுங்க மா. உங்கள காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. அதனால தான் அவர் வீட்ல தங்க வேண்டியதா போச்சு..."

"பரவாயில்ல விடு தென்றல். யாரோ ஏதோ சொன்னதைக் கேட்டு நான் கோவத்துல பேசிட்டேன். நீயோ, கதம்பரியோட மகனோ தப்பானவங்களா இருக்க முடியாது. ஒரு தடவை காதம்பரி என்கிட்ட சொன்னா, 'நானே என் மகன் கிட்ட எதுவும் சொல்லனாலும் கூட அவனாவே கண்டு பிடிச்சுடுவான்னு' சொன்னா. அவ சொன்ன மாதிரியே, உன்னை பார்த்த போது மாமல்லன் மனசுல எதையோ உணர்ந்திருக்கான் பாரேன்... இது எல்லாமே விதிக்கப்பட்டிருக்கு..." என்று சில நொடி தாமதித்த அவர்,

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Unde poveștirile trăiesc. Descoperă acum