2 விசாரணை

1K 61 6
                                    

2 விசாரணை

உதவி ஆணையர் ஓவியன், அவனிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கின் கோப்பை படித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகம், தெளிந்த நீரோடை போல் இருந்தது. அவனது கையில் இருந்த கோப்பும் அப்படித் தான் இருந்தது. அதில் எந்த விவரமும்  இல்லை. கோப்பை ஓரமாய் வைத்துவிட்டு தலையை நிமிர்ந்த அவனை பார்த்து, ஆய்வாளர் முருகன் சல்யுப் செய்து,

"இன்ஸ்பெக்டர் முருகன் ரிப்போர்ட்டிங் சார்" என்றான்.

லேசாய் தன் தலையை அசைத்தான் ஓவியன்.

"உங்க கூட சேர்ந்து வேலை செய்ய எனக்கு கிடைச்ச சந்தர்ப்பத்துக்காக நான் ரொம்ப சந்தோஷப்படறேன் சார்"

"கூடிய சீக்கிரமே அதுக்கு நேர்மாறா நினைப்பீங்க" என்ற ஓவியனை பார்த்து, திருதிருவென விழித்த முருகனிடம்,

"என் கூட வேலை செய்றது அவ்வளவு சுலபமா இருக்காது" என்றான் ஓவியன்.

"அது ரொம்ப நல்ல அனுபவமா இருக்கும்னு பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் சார்"

"நம்ம டிபார்ட்மெண்ட் எல்லாரையும் நல்லா ஏமாத்திக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். அதை எல்லாம் நம்பாதீங்க"

தன் கண்களை சுருக்கிய முருகனைப் பார்த்து,

"நீங்க தானே மூணு மாசமா இந்த கேசை ஹேண்டில் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்றான்.

"எஸ் சார்"

"இதுவரைக்கும் கொலைகாரனை பத்தி ஒரு க்ளூ கூடவா உங்களுக்கு கிடைக்கல?"

"ஆரம்பத்துல, இது கொலை தான்னு எங்களால நிச்சயமா சொல்ல முடியல சார்"

"ஏன்?"

"ஏன்னா, கொலை நடந்தது கிரவுடட் ஏரியாவுல சார். சந்தேகப்படுற மாதிரி அந்த ஏரியா உள்ள யாரும் நுழையல. அதே நேரம், எரிச்சு கொல்லப்பட்டவங்க கத்தி கூப்பாடு போடல"

"கொலைகாரன் ஏன் அதே ஏரியாவை சேர்ந்தவனாக இருக்கக் கூடாது?"

"இல்ல சார். மூணு கொலை நடந்ததும் வெவ்வேறு ஏரியாவுல. அதனால கொலைகாரன் அந்த ஏரியாவை சேர்ந்தவனா இருக்க வாய்ப்பில்ல"

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Dove le storie prendono vita. Scoprilo ora