3 தூரிகை

890 51 10
                                    

3 தூரிகை

பார்க்கவே மிகவும் பலவீனமாகவும், கல்போன்ற முகபாவத்துடனும் காணப்பட்டான் அகிலன்.

"அன்னைக்கு என்ன நடந்துச்சி?" என்றான் முருகன்.

"நான் அன்னைக்கு ஆபீஸ்ல இருந்தேன் சார். அது எலக்ஷன் டைம் அப்படிங்கிறதால எனக்கு அடிஷனல் டூட்டி போட்டிருந்தாங்க. அப்போ என்னோட பக்கத்து வீட்டுக்காரங்க எனக்கு ஃபோன் பண்ணி, என் வீட்டில் இருந்து ஏதோ தீஞ்ச வாசனை வருது, எவ்வளவு கதவை தட்டின போதும், என் வைஃப் கதவை திறக்கவே இல்லைன்னு சொன்னாங்க. நான் என் வீட்டுக்குப் போய் பார்த்தப்போ, என் வைஃப் முழுசா எரிஞ்சு போயி, சாம்பலாகி இருந்தா, சார்" என்று கதறினான் அகிலன்.

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"

"என் வைஃப் ரொம்ப நல்லவ, சார். அதிர்ந்து கூட பேச மாட்டா. என்ன நடந்திருக்கும்னு என்னால யூகிக்கவே முடியல"

எதுவும் பிடிப்படாமல் அங்கிருந்து கிளம்பினார்கள் ஓவியனும் மற்ற காவல்துறையினரும்.

"அடுத்து என்ன சார்?" என்றான் முருகன்.

"தாலுக்கா ஆஃபீசுக்கு போக போறோம்"

அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள். முதல் வழக்கில் எப்படிப்பட்ட விபரங்கள் கிடைத்ததோ, அதேபோலத் தான் அங்கும் அவர்களுக்கு கிடைத்தது. மிகவும் வெறுமையாய் உணர்ந்தான் ஓவியன். எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே அவனுக்கு புரியவில்லை.

அவர்கள் ஜிப்பை நெருங்கிய போது,

"மாம்ஸ்..." என்ற குரலை கேட்டு, தன் கண்களை எரிச்சலுடன் மூடினான் முருகன்.

அவனது முகபாவத்தை பார்த்து முகம் சுருக்கினான் ஓவியன்.

"சார், சார், ப்ளீஸ் வேலுவை சீக்கிரமா வண்டியை கிளப்ப சொல்லுங்க" என்றான் முருகன்.

"உங்களை யாரோ கூப்பிடுறாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் ஓவியன்

"அதுக்காக தான் சார் போகலாம்னு சொல்றேன்"

அப்போது அவர்களை நோக்கி ஓடிவந்த ஒருவன், முருகனை ஆசையாய் அணைத்துக் கொண்டான்.

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now