21 சப்பாத்தியும் கைப்பழக்கம்

753 53 11
                                    

21 சப்பாத்தியும் கைப்பழக்கம்...

தூரிகை, ஓவியனின் காலை தட்ட, திடுக்கிட்டு எழுந்தான் ஓவியன்.

"என்ன ஆச்சு?"

"நான் மேகாவை எழுப்ப போறேன்"

"ஓ..."

சோபாவில் இருந்து இறங்கிய அவன், தூரிகை தடுப்பதற்கு முன், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

"நான் உங்களை உங்க ரூமுக்கு போக சொல்ல தான் எழுப்பினேன்"

"ஏன்? மேகா என்னை இங்க தானே தூங்க சொன்னா?"

"அவ உங்களை இந்த பார்த்தா, தினமும் அவ தூங்கி எழுந்துக்கும் போது, நீங்க இங்க இருக்கணும்னு நினைப்பா"

"அப்படியா?" என்று கூறிவிட்டு,

அவனே மேகாவை தட்டி எழுப்ப, *என்ன மனிதன் இவன்?* என்பது போல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் தூரிகை. ஓவியனை பார்த்த மேகா, பளிச்சென்று புன்னகைத்தாள்.

"குட் மார்னிங் மாமா"

"குட் மார்னிங் டா கண்ணா"

"நீங்களும் எங்க கூட தான் தூங்கினீங்களா?"

"பின்ன? நான் இங்க தான் தூங்கணும்னு நீ சொன்ன பிறகு, நான் எப்படி என்னோட ரூமுக்கு போவேன்?" என்றான், தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்ற தூரிகையை பார்த்தபடி.

"போய் சீக்கிரமா ஸ்கூலுக்கு ரெடியாகு.  இன்னைக்கு சாயங்காலம் நீ உன்னோட பாட்டி வீட்டுக்கு போகணும் இல்ல?" என்றான் ஓவியன்.

"ஆமாம். நகுல் வர போறான்"

கட்டிலை விட்டு கீழே இறங்கி குளியல் அறைக்கு சென்றாள் மேகா.

"என்ன வேலை செஞ்சு வச்சிருக்கீங்க நீங்க?" என்றாள் துரிகை.

"நான் என்ன செஞ்சேன்?"

"மேகா நிறைய கேள்வி கேட்பா"

"அதனால?"

"நீங்க சோபாவுல தூங்குறத பாத்து, அவ கேட்டா என்ன சொல்றது?"

"நீ கவலைப்படாதே, அவ கேள்வி கேக்குற மாதிரி நான் வச்சிக்க மாட்டேன்"

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Wo Geschichten leben. Entdecke jetzt