26 நன்மை பயக்கும் எனின்

738 54 8
                                    

26 நன்மை பயக்கும் எனின்...

தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வராத ஓவியனும், முருகனும் அகிலனின் உடலை பார்த்தபடி நின்றிருந்தார்கள். ஓடிச் சென்று அவனது நாடித்துடிப்பை சோதித்தான் முருகன்.

"செத்துட்டான் சார்" என்றான்.

குருதியோ, மரணமோ அவர்களுக்கு புதிதல்ல. பல்வேறுபட்ட மரணங்களையும், விபத்துகளையும், இரத்த வெள்ளத்தையும் கடந்து வந்தவர்கள் தான் அவர்கள். ஆனால், அகிலனின் மரணம் அவர்கள் மனதை ஏதோ செய்தது. அவன் ஒரு கொலைகாரன்... சட்டத்தின் பார்வையில் குற்றவாளி... ஆனாலும் அவனுக்காக அவர்களது மனம் வருத்தப்பட்டது.

மக்கள் அகிலனின் வீட்டின் முன் கூடத் துவங்கினார்கள்.

"அடுத்தது என்ன சார்?" என்றான் முருகன்.

"பால்கனி கதவை சாத்தி தாழ்பாள் போடுங்க" என்றான் ஓவியன்.

கதவை சாத்தி தாளிட்டான் முருகன். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான் ஓவியன். என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாய் யோசித்த பின்,  கண் திறந்தான் ஓவியன்.

"நான் பிரஸ்ஸுக்கு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிற வரைக்கும், நீங்க யார்கிட்டயும் எதுவும் பேச வேண்டாம். அப்புறம்..."

அவனது பேச்சை துண்டித்து,

"நீங்க சொல்றதையே நானும் ஃபாலோ அப் பண்ணிக்கிறேன் சார்" என்றான்.

சரி என்று தலையசைத்த ஓவியன், ஆணையருக்கு ஃபோன் செய்தான்.

"சார், அகிலன் இறந்துட்டான். அவன் தன்னைத்தானே கொன்னுகிட்டான்" என்றான் ஓவியன்.

அதைக்கேட்டு அதிர்ந்த ஆணையர்,

"அப்படின்னா அவன் ஒரு சூசைட் ஸ்குவாடா?" என்றார்

"அப்படி தான் சார் தெரியுது" என்றான்.

"சரி, எல்லா ஃபார்மாலிட்டிசையும் முடிச்சுக்கிட்டு என்னோட ஆபிஸ்க்கு வாங்க" என்றார்.

"சரிங்க சார்" என்று அழைப்பை துண்டித்தான் ஓவியன்.

அதன் பிறகு ஆம்புலன்ஸ்க்கும், ஃபாரன்சிக் துறைக்கும் ஃபோன் செய்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த, அகிலனின் மற்றொரு சாதாரண கைபேசியை எடுத்து, அதை தீயில் பற்ற வைத்தான். அது முழுதாய் எரிந்தபின், அதை அகிலனின் சட்டை பாக்கெட்டில் வைத்தான்.
அந்த வீட்டில் இருந்த வேறு எதையும் அவர்கள் தொடவில்லை.

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now