10 திருப்புமுனை

714 48 7
                                    

10 திருப்புமுனை

தூரிகையின் அண்ணன்,  கார்மேகத்தின் கைபேசியின் வரலாற்றை படித்துப் பார்த்த ஓவியன், அவனும் அந்த வழக்கில் தொடர்புடையவன் என்பதை புரிந்து கொண்டான். கார்மேகத்துடன் தொடர்பில் இருந்த அந்தப் பெண்ணையும், கொலைகாரன் கொன்று விட்டான். அதைப் பற்றி தூரிகைக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான், அவளை தன்னிடம் பேச விடாமல் அவன் தூரிகையை மிரட்டிக் கொண்டிருக்கிறான். இந்த வழக்கில், தூரிகை தனக்கு உதவி செய்தால், தான் சுலபமாய் கொலைகாரனை பிடித்து விடுவான் என்ற பயம் கொலைகாரனுக்கு இருக்கலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமாய் நடப்பதாய் தெரியவில்லை. தூரிகை பயந்திருக்கிறாள். முதலில் அந்த பயத்தை இவன் உடைத்தாக வேண்டும். அதற்கு அவள் ஒரு சந்தர்ப்பம் அளிப்பாளா என்று தெரியவில்லை. ஒரு நண்பனாய் அவளை அணுகினால் அது நடக்காது. அவன் தனது அதிகாரத்தை பயன்படுத்தியாக வேண்டும். வேறு வழியில்லை...

"யாரு மச்சான் இந்த பொண்ணு? இவளும் மத்தவங்களைப் போலவே..." என்ற பிரின்சின் பேச்சை அவசரமாய்  வெட்டி,

"இல்ல... அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல..." என்றான்.

"ஓ... அவ அழகா இருப்பாளா?" என்ற
அவனைப் பார்த்து முறைத்தான் ஓவியன்

"ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தான் பா கேட்டேன்...." என்று வழிந்தான் பிரின்ஸ்.

..........

யூடியூபை பார்த்து தான் சமைத்துக் கொண்டு இருந்த கிரேவியை கிளறிக் கொண்டிருந்தாள் தூரிகை. யாரோ அழைப்பு மணியை அழுத்தும் சத்தம் கேட்கவே, அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு வெளியே வந்து, கதவை திறந்தாள். கைகளை கட்டிக் கொண்டு நீண்டிருந்த ஓவியனை பார்த்து, அவளுக்கு அலுப்புடன் கலந்த பயம் ஏற்பட்டது.

"நான் உங்ககிட்ட பேசணும்" என்றான்.

"உங்க கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். தயவுசெய்து இங்கிருந்து போங்க"

கதவை சாத்தப் போனவள்,

"மிஸ் தூரிகை தமிழ்ச்செல்வன்... உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கிறது ஏசிபி ஓவியன். அதை மறந்துடாதீங்க... என்கொயரிக்கு வந்த போலீஸ் ஆஃபீசருக்கு பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை"

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now