14 முடிவு

708 50 10
                                    

14 முடிவு

ஓவியனும் தூரிகையும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட முருகன், அதிசயித்துப் போனான். அவர்கள் இருவருமே இந்த வழக்கில் தொடர்புடையவர்கள். அதை ஓவியனே இந்தப் பெண்ணிடம்  வெளிப்படையாய் ஒப்புக்கொண்டு விட்டான். யார் இந்த பெண்? எதற்காக தன் அக்காவின் கதையை இந்த பெண்ணிடம் ஒப்பித்துக் கொண்டிருக்கிறான்? அதை அவன் தன்னிடம் கூட கூறியதில்லையே...! மேலும் முருகனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அந்த பெண்ணை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அல்லவா கேட்டான் ஓவியன்...! தன் அக்காவின் குழந்தையை பார்த்துக் கொள்ள ஓவியனுக்கு ஒரு ஆள் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஆனால், ஓவியன் நினைத்தால், அதை பல வழிகளில் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது, இதை காரணம் காட்டி, சமைக்க கூட தெரியாத ஒரு பெண்ணை அவன் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்? உண்மையிலேயே அந்த பெண்ணை ஓவியன் காதலிக்கிறானா? அல்லது இந்த வழக்குக்காக தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானா?

"நான் வீட்டுக்கு போகணும். மேகா வந்துடுவா" என்றாள் தூரிகை.

"சரி, நான் உங்களை ட்ராப் பண்றேன்" என்றான் ஓவியன்.

"பரவாயில்ல, சார், இருக்கட்டும். நான் ஆட்டோவில் போறேன்"

"நெஜமாத் தான் சொல்றீங்களா?"

"ஆமாம்"

"சரி, எனக்கும் கமிஷனர் ஆஃபீஸ் போக வேண்டிய வேலை இருக்கு" என்றான் ஓவியன்.

அங்கிருந்து கிளம்பினாள் தூரிகை. ஓவியனும் ஆணையர் அலுவலகம் நோக்கி கிளம்பினான். அவனைப் பார்த்தவுடன் நிமிர்ந்து அமர்ந்தார் ஆணையர். அவருக்கு திருத்தமான ஒரு சல்யூட் வைத்தான் ஓவியன்.

"எனி ப்ராக்ரஸ்?" என்றார் ஆணையர்.

"எஸ் சார்... இந்த கொலைகளுக்கு எல்லாம் என்ன காரணம்னு கண்டுபிடிச்சிட்டேன் சார்"

"அப்படியா? என்ன காரணம்?"

"எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் சார்... கொலையான எல்லா பொம்பளைங்களுக்கும் வேற ஒருத்தர் கூட கள்ளத்தொடர்பு இருந்திருக்கு"

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now