24 காரணம்

740 49 8
                                    

24 காரணம்

அகிலனை கண்ட ஓவியனும், முருகனும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதே அதிர்ச்சி அகிலனுக்கும் ஏற்பட்டது. காவல்துறையினர், தனது வீட்டின் பால்கனியின் கதவை உடைத்து,  எதிரி குதித்து உள்ளே வருவார்கள் என்று யார் தான் எதிர்பார்க்க முடியும்? மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தனது கைபேசியை நோட்மிட்டபடி நின்றான் அகிலன். அதை கவனிக்க தவறவில்லை ஓவியன்.

ஓவியனும் முருகனும் தங்கள் துப்பாக்கிகளை அகிலனை நோக்கி உயர்த்தினார்கள். அதை சிறிதும் எதிர்பார்க்காத அகிலன், கலங்கித் தான் போனான்.

அகிலனின் நெஞ்சில், இதயத்திற்கு வெகு அருகில், கட்டு போட பட்டிருப்பதை கவனித்தான் ஓவியன்.

தன்னை சுகரித்துக் கொண்ட அகிலன்,

"என்ன சார் இதெல்லாம்?" என்றான்.

"பூட்டப்பட்ட வீட்டுக்குள்ள நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? செங்கல்பட்டுக்கு போறதா தானே சொன்னிங்க?"

தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அகிலன் திணறுவான் என்று ஓவியன் எதிர்பார்த்து இருந்தால், அப்படி நடக்கவில்லை. அவன் சாகவாசமாய் பதில் அளித்தான். *கன் பாயிண்ட்டில்* இருக்கும் போது கூட அவனால் எப்படி இவ்வளவு சாதாரணமாய் இருக்க முடிகிறது?

அடிபட்டிருந்த தனது நெஞ்சை சுட்டிக்காட்டி,

"எனக்கு அடிபட்டுடுச்சு. அதனால ப்ரோக்ராமை கேன்சல் பண்ண வேண்டியதா போச்சு" என்றான்.

"வீட்டை வெளி பக்கமா பூட்டிக்கிட்டு உள்ளே இருக்க வேண்டிய அவசியம் என்ன?"

"எனக்கு அடிபட்டிருக்கு. என்னை நலம் விசாரிக்கிறேன்னு, ஆளாளுக்கு என்னை தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அது எனக்கு பிடிக்கல. அதனால தான் வீட்டை வெளி பக்கமா பூட்டிக்கிட்டு உள்ள இருக்கேன்"

"உங்களுக்கு எப்படி அடிபட்டது?"

"கால் இடறி கீழே விழுந்துட்டேன்... ஒரு கல்லு நெஞ்சில  குத்திடுச்சி.."

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now