28 யூகம்

775 50 9
                                    

28 யூகம்

அகோரமூர்த்தியின் அழைப்பை பற்றி யோசித்த வண்ணம் இருந்தான் ஓவியன். அவனை மிரட்டி கொண்டிருப்பது யார்? எதற்காக அதை செய்கிறான்? அவனுக்கு நன்றாக தெரியும், அகிலன் மட்டும் தான் ஒரே ஒரு கொலையாளி. அப்படி என்றால் இந்த புதிய கொலைகாரன் யார்? கொலைகாரனின் பெயரை சொல்லி, தன்னுடைய வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள யாராவது முயல்கிறார்களா? குளியலறையில் இருந்து தூரிகை வெளியே வருவதை பார்த்த ஓவியன், தன் கைபேசியை கட்டிலின் மீது வீசி விட்டு குளியலறை நோக்கி சென்றான். மேகா அவர்களுக்காக காத்திருப்பாள். இப்போதைக்கு அது தான் முக்கியம்.

மேகாவை அழைப்பதற்காக அவளது பாட்டி வீட்டிற்கு வந்த ஓவியனும், தூரிகையும், அவள் நகுலுடன் மிகவும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சற்று தூரத்தில் நின்றார்கள். மேகாவுக்கு சில புகைப்படங்களை காட்டிக் கொண்டிருந்தான் நகுல்.

"நான் ரன்னிங் ரேஸ்ல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினேன். இது எங்க ஸ்கூல் பேரன்ட்ஸ் டேல எடுத்த போட்டோ"

"எங்க ஸ்கூல்ல கூட பேரன்ட்ஸ் டே செலிப்ரேட் பண்ணுவாங்க"

"ஆனா உனக்கு தான் பேரன்ட்ஸே இல்லையே" என்றான் நகுல், தான் சொல்லும் வார்த்தையின் ஆழம் அறியாமல்.

மேகாவின் முகம் தொங்கி போனது. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அப்பொழுது ஓவியன் அவளை அழைத்தான்.

"மேகு..."

அவன் குரல் கேட்டு திரும்பிய மேகா, அங்கு தன் அத்தையும், மாமாவும் நின்றிருப்பதை பார்த்து, புன்னகையுடன் அவனை நோக்கி ஓடினாள். ஓவியன் அவனை தூக்கிக் கொள்ள, அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் மேகா.

தூரிகையை பார்த்து வெள்ளந்தியாய் சிரித்தான் நகுல். அவன் உரைத்த வார்த்தைகளுக்காக அவனை கடிந்து கொள்வது சரியாகாது. அவனும் குழந்தை தானே...!

மேகாவின் தலையை அன்பாய் வருடி கொடுத்த ஓவியன்,

"நானும் தூரிகையும் உன்னோட ஸ்கூல் பேரன்ட்ஸ் டேக்கு வருவோம்" என்றான்.

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now