அவளும் குறும்பும்

257 6 2
                                    

கவிதையை இரசிக்க விரும்பினேன்

அவை

எழுத்துக்கள் அடுக்கி வைத்த அலமாரி

மட்டுமே

ஆனால் கவிதை இன்னதென்று உணர்ந்தேன்

அவளினை கண்டு

அவள் கவிதையை கர்வமாய் பெற்றவள்

உண்மையில் அவளின் பெற்றோர் தான்

இந் நூற்றாண்டு முழுதும்

உலகின் அனைத்து இலக்கிய பரிசையும்

பெறுவதற்கு உரியோர்

அவளுக்கு ஆணவம் இல்லை

அத்தனை நளினமும் இல்லை

ஆனால் அற்புதம் அங்கு தான்

அவளும் குறும்பும்

மழை தூறும் முன் வீசும்

மண்ணின் மணம் போல

அவள் மனித குலத்தில் பிறந்த

மாயா விநோத பிரதிபிம்பம்

அவள் அவள் தானா?

எத்தனை முறை தான் உற்று நோக்குவது?

நோக்கும் இடமெல்லாம் உன் உருவம்

தெரிவது போல் நோய் கொள்ளும் வரைதனிலோ

உன் விடியலில் என் வானவில்

வண்ணம் யாவும் மழை நீரில் கலந்திட

என் பூமியில் உன் பார்வையில்

ஆயிரம் கதிரவன் பூவாய் மலர்ந்திட

நம் உலகினில் நாம் இருவரும்

பிரம்மன் படைப்பினை முந்திட வேள்விகள்

சேர்ந்து செய்தே சோம்பல் முறிப்போம்

வெட்கத்தினால் சிவந்ததோ உன் கன்னம்

மழை முத்தமாய் பெற்றதால் விழைந்ததாய்

உலகம் எண்ணும்

வேண்டாத எண்ணங்கள் நமக்கெதற்கு ...

வேண்டிப் பெறுவோம் இதழ் பதிப்பு

இதற்கு தேவை மறுபதிப்பு

இன்னும் கோடி காலம் தோன்றும்

உன்னை எண்ணியே மாய்ந்து போகும்

பஞ்சணை கண்ணீரில் உடைந்து தெரிக்கும்

வஞ்சனை செய்யாது வாழ விடு

மாயாஜாலம் புரிகின்றாய்

மருத்துவன் மயங்கி வீழ்கின்றான்

என் இதயம் உன் உடலில் குருதி

செலுத்த துடிக்கிறதே

உன் மூளை என் நெஞ்சில்

கட்டளைகள் இடுகிறதே

உன் வெட்கத்தை பரிசளித்து

என் திமிரை பிடுங்கிக் கொள்கிறாய்

இன்னும் எத்தனை வதை செய்தாய்?

இனி எப்படி வீழ வழி செய்வாய்?

செவ்வாய் குவித்து பதில் சொல்வாய்

இல்லையேல்

விழிவேல் கொண்டு விலா துளைப்பாய்

By பாலா

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now