பழிக்குப் பழி

56 4 1
                                    

யோசித்துப் பார்த்தால் 

சீன பெருஞ்சுவர்

சிறுத்துப் போய் விடும்

என்று முதல் உனை நான் அறிவேன் என்று .,,

நீண்டதொரு 

கடந்தகாலப் பயனத்திற்கு

பின் தான்

தெரிந்து கொண்டேன்.

எந்தன்  முதல் எதிரி நீதான் என்று

என்ன விழிக்கின்றாய்?

செய்த குற்றங்கள் 

செழிப்பான வாழ்வுதனில்

செத்துப் போய்விடுமா?

நன்றாய் உன் கபாலத்தை

தட்டி விடு

உன் பெரு மூளைக்கு

சிறு வேலை கொடு...

எத்தனை முறை என்னை

நோகடித்திருப்பாய்

வெறும் 

சிலேட்டு பல்பத்திற்காக ?

எத்தனை முறை என்னை

கலங்கடித்திருப்பாய்

உன் முதலாம் வகுப்பு

புத்தகம் காட்டி?

அருந்தவப்புதல்வன் என

நான் பெற்ற பெயரனைத்தையும்

நான் பிறர் அறியாது  தின்ற

மிட்டாய்களை கூறி

திணறடிக்கச் செய்தாயே

தகுமா  உனக்கு

எப்போதும் வாதிட்டு

வாயளப்பாயே

அதுவாவது 

ஞாபகம் அறியுமா?

வீட்டுப் பாடத்தில் கவனம் செலுத்தாது

பள்ளிப் பருவத்தில் 

நான் தொலைத்த 

பேனாக்களையும்

பென்சில்களையும் கணக்கெடுக்க

உனக்கு கற்றுக் கொடுத்தது யார்?

நான் சுகவீனமான நாட்களில்

நீ சுவைத்துப் பார்த்த

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now