"கல்லூரி " காதல்

94 3 1
                                    

கல்லூரி ஒரு
வேள்விச் சாலை
இங்கு தான் 
இங்கு மட்டும் தான்
நான் நானக வாழ்கின்றேன்.
இங்கே
என் சுதந்திர
இறக்கையை பிடுங்குவதற்கு
எவரும் முன்வருவதில்லை....
என் கற்பனைகளுக்கு
தடுப்பணை கட்டுபவர்களும் இல்லை...
கிசுகிசுக்கள் செவிச்சவ்வை
கிழித்து போடும் ....
அப்போதுதான் புறந்தள்ளும்
பக்குவந் தோன்றும்
மூன்றோ நான்கோ ஐந்தோ
ஆண்டுகள் பலவாயினும்
பாரமாய் அல்லாது
பசுமையான நினைவுகளாய் ...

இவ்விடந்தான் 
நவீன இலக்கியத்தின் பிறப்பிடம்
அது நட்போ காதலோ
நம்பிக்கையோ பிறவோ
இதுகாறும் இயம்பி வந்த 
இலக்கியத்தில்
இனிய சொல்லாம் தோழமை ..
"யாதும் ஊரே; யாவரும் கேளீர் "
என்ற கற்பனைக்கு
உயிர் கொடுத்த  உத்தம உணர்வு

உன் வீட்டுச் சாப்பாடு
என் பசியை நீக்கியதாலோ
என் வீட்டு சித்திரங்கள்
உனக்கு இனிமை தந்ததாலோ 
ஏற்பட்ட உணர்வல்ல
என் சகோதரிக்கு புதிய சகோதரனை
உருவாக்கியதன் விளைவு அது
உன் தந்தையும் தாயும்
என்னை இன்னொரு பிள்ளையாய்
உருவகித்ததில் ஏற்பட்ட பாசமது

இங்கு தான் இயற்பெயரை காட்டிலும்
புதுப்பெயரும் புனைப்பெயரும்
கெஞ்சலும் கொஞ்சலும்
கேலியுமாக  
சிநேகத்தாடு கிடைக்கும் 
கடைசி இடம்
இங்கு தான் அபத்தம் இல்லாமல்
அழகினை அனைவரோடும்
இரசிக்கும் இடம்

எனக்காக 
கை கிழித்து
இரத்தங் கொட்டி
நட்பினை நிரூபிக்கவில்லை
குருதி உருமாறி
நீவிர் உகுத்தகண்ணீர் 
கூறும் காவியம் தான் 
நட்பு

கூடவிருந்து குழி பறிக்கும் குள்ள நரி
இங்கு அதிகமுண்டு ....
நான் குழிக்குள் விழும் முன்தான் 
நண்பனின் 
வல்லமையை
உணர முடிந்தது.
தன் கைகொடுக்கும்
உத்தமன் - அவன் தோழன்
வேறொரு உதவி கோருவான்
மத்திமன்- மானிடன்
செவிடனாய் குருடனாய் கடப்பவன்
அதமன் - மோழை

இந்த வகுப்பறை தான்
எத்தனை மாற்றங்களை செலுத்தியது
என்னில் ..
என் குற்றங்கள் கூட பல சமயம்
குழந்தை தனம் என மன்னிக்கப்பட்ட
தேவாலயம் இதுதான்
என்னுள் புதைந்த குழந்தையை
உசிப்பி விட்டு
வேடிக்கை காட்டும் விளையாட்டு கூடமிது
என்னுள் உறங்கிய கலைஞனை
மேடையிட்ட  திடலது
என் இயலாமையை கூட 
இனிமையாக்க
தோழர்கள் உலாவரும் 
சுவர்க்கமும் இதுதான்
இங்கே தான்
நான் வீழும் போது
கை கொட்டும் வீணர்களை விட
எழும் போது
கைதட்டும் வீரர்கள் அதிகம்..
இனி என்னை சீண்டி
சிரித்து மகிழ
உன்னை தவிர வேறொருவர்
வேறு உயிருண்டோ தோழா ....
இவ்வுலகம் ஒரு நாடக மேடை எனில்
கல்லூரி மாணவனாய் நடித்தால்
மட்டும் போதும் ....
ஏனெனில் வாழும் போதே
வைகுந்தம் இங்கு மட்டுந்தான்

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now