நல்லரசு ஆகுக

20 2 1
                                    

இத்தேசம் ஏன் வல்லமை பெறவில்லை ?

அன்றோ தேனும் , பாலும்

தெருவெங்கும் 

ஓயாது ஓடியதால் 

நிலமகளும் பால் மேனி கொண்ட

கதையளப்பார்  இப்பாரதத்தில்

இன்னும் மாயவில்லை.


மடை உடைத்த வெள்ளத்திற்கு

வெண்சோற்றில் தடை விதித்த  விந்தை

நடை செய்ததும் இங்கே தான்.


மானம் வீழின் பின்

விழி திறவார் சிறந்ததும்

நெஞ்சத்து அணிகலன்

வீர விழுப்புண் தன் மகவின்

முதுகினை அலங்கரித்தால்

மார்பறுப்பேன் என முழக்கமிட்ட

மங்கை மகிழ்ந்ததும் 

இங்கே தான்.


மூடத்தனம் கடலோர குன்றளவும்

ஞானம் அலையெனவும்

வளர்ந்த இத் திருநாடு

என்விளைய திருவோடு 

ஏந்த வேண்டும்?


 இளையரெல்லாம்

இறைவனடி சேர்ந்து

விட்டனரோ !

திறங்கொண்டோர்  

 வேரற்று விழுந்தனரோ?

விருந்தோம்பலில் சிறந்தவர்

விலைபோய் விட்டனரோ?


 காற்றினிலும் நித்தம்

கற்பென்பதை  சுவாசிக்கும்

 கன்னியர் மானம்

வீணர்களால்  வீழ்த்தப்படுவது

இந்நிலந்தனிலே அரங்கேறும்

கொடுமை எதற்காக?


எல்லாம் சாதிமதச் சச்சரவு

அவ்வவற்றை காக்க

காதலை நாடு கடத்த

திட்டமிட்ட

கயவர்களால் நேர்ந்த நிலை!

எண்ணிப் பார்!

காதல் !

காதில் விழுகிறதா ?

இல்லை

காற்றிலே  மறைந்ததா?


மதுவும், மாதுவும்

மானிடருள்

பொதுவும் போகமுமாய்.....

இதை களையெடுத்தது எது?

காதல் ! 

காதல் மட்டுந்தான் !

காதல் செய்த கருணையால் தான் ,


காதலியால் காதலுற்றான் 

காதலால் கலை கற்றான்

கலையினால் செல்வமுற்றான்.

செல்வன் அறஞ்செய்தான்

அறனால் புகழ் விளைத்தான்

புகழால் மகிழ்வுற்றான்.


காதலிக்கும் போது தான்

 காதலன் கண்டு கொண்டான்

காதலிக்கும் மணம் உண்டென்று

அவனுக்குள்ளும்

பெண்ணியவாதிகள்

பிறப்பெடுத்தனன்

கட்டுக்கதை அன்று இது

கலைமகன் பாரதி 

கண்ணம்மாவை காதலித்த கதையது

காதல் திருச்சபையில்

தஞ்சமடைந்தும்

பலர் காக்கப்படாது

கழுவேற்றப்பட்டவரும்

கழுத்தறுக்கப்பட்டவறும்

இருக்கின்றார்

காதல்பிரான் கைகள்

கட்டுண்டதால்.....

இன்று

பாவமன்னிப்பிற்கு

பாரதமே ஏங்கி நிற்கிறது....

by பாலா

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now