தோழனின் தோழி

24 3 3
                                    

 அவள் விநோதினி

பெற்றோர் இட்ட பெயரல்ல

உலகம் கொடுத்த அடையாளம்

புதிரின் பெண் பிம்பம் ஆகையால்


அவள் பாரதி

புதுமையும் புரட்சியும் படைக்கவில்லை

மெளன வீணையுடன் புன்முறுவல்

பூப்பதனால்

வானத்திரை அவளுக்கு மட்டும்

ஒளிப்படம் காட்டுமோ?

அக்காட்சி அவளுடைய

துக்கத்தை கூட்டுமோ?

அவ்வபோது அழுகின்றாள்.

விழிநீரை விடுதலையும்

உமிழ்நீரை விழுங்கவும்

தெரிந்த அளவு

துக்கத்தை விழுங்கவும்

துன்பத்தை விடுவிக்கவும்

தெரியாதவள்

புத்தகப் புழுவாய்  நெளிகின்றாள்.


மலரினுள் விளைந்த முத்தெனவே

மதுரம் கூட்டும் சுவையெனவே

மகிழ்வாய் அவளும் சிரிப்பதுண்டு

அது

மனதினை  இனிதாய்ஆழ்த்தும்

ஆற்றலுண்டு.

எனினும் அவள்

சிரிப்பதில்லை..

இருந்தும் யாரும்

இரக்கமற்றவள் என

விளிப்பதில்லை.


வகுப்பறையில் அவள்

நாள்காட்டி

அன்றைய தினப் பலனை

அவள் முகந்தான் தெரிவிக்கும்.

தனிமையை அவள் தத்தெடுத்தாள்

தன் இமை நனைத்து

திரிகின்றாள்.


உணர்வுகள் அலையெனவே

அவள் மலைமனதை

அரிக்கின்றதோ?

அதை எந்தன் மனதும்

அறிந்திட்டதோ?

தோழன்  உனக்கு

நான்  எனும் போது

உன்னை மட்டும் தனியே

தாக்க துன்பந் தான் முனைந்திடுமோ?


அவள் கருந்துளை மனதினை

கணிக்கக்கூட இயலவில்லை...

அவள் துருப்பிடித்த மனதினை

தூர்வாற துணை வேண்டாம்

என்கின்றாள்.


அவள்  நீர்நிலை  தாமரை

வெளியில் பூத்துத் திரிந்தாலும்

அடி நெஞ்சில் சோகச் சல்லி வேர்

புதைந்திருக்கும்


அடித்த தாய்  அணைக்க மாட்டாளா

என எண்ணும் குழந்தை போல்

திட்டிய அவள் திருவாயால்

சோகம் பகிர மாட்டாளா என நான்..


முடிவுண்டு என அறிவேன் நான்

அதுவரை  அகம் புறமாய்

அன்பினை யொழிய

நானுமுண்டு

என் தோளுண்டு உன் துயரில்லை.

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now