ஆண்பாவம்

22 6 4
                                    


செப்பு நெரி்ஞ்சில் மெத்தை தனில்

துயில் கொள்ள செப்புகிறாய்

நியாயம் தானா?

பொல்லாத ஆண்பாவம்

பொதிபொதியாய் சுமப்பவளே!

ஆடவர்கிழைத்த அநீதிகள் தான்

எத்தனை? எத்தனை??

உன் நெற்றியிலே

சுருண்டிக்கும் சிகையில்

சுருக்கிட்டு செத்தவர்

எத்தனை பேர்

தாக்கித் தகர்க்கும் தனுர் வித்தை

உன் விழியினிலே

சொக்கித் திரியும் போதை

என் கண்களிலே

உன் கண்ணக் குழி தனில்

மாண்டவர் மீளவில்லை

உன் உதட்டுக் குவிதனில்

உயிர்பறி கருவியுண்டோ?

புவியில் தப்பிப் பிழைத்து

வாழும் மோகினியோ?

தென்றலிலே தேவதையாய்

நீ வாழுகிறாய்!

ஆனால்

வாடைக்காற்றினிலே

தெருத்தெருவாய்

எங்களைத்தானே

சுற்ற வைத்தாய்

நிலவு புவியை

வலம் வருகிறதோ இல்லை

பூரண சந்திரனாய்

புவியெங்கும் நடை பயில்கிறாய்

உன் பாவங்கள்

காசிக்கு போனாலும்

கரையாது

நிற்கட்டும்....

திமிர் பிடித்து

திரிகின்றாயா?...

இல்லை

ஆண்களை

திமிரப் பிடித்து

தின்கின்றாயா?

நிச்சயம் காதலும் உன்

வாழ்வை கடந்து போகும்

அன்றைக்கு

உன் ஊழ்வினை

உன்னை உலுக்கும்

நீ

அழ வைத்த

ஆண்களின் கண்ணீர்

ஆழிப்பேரலையாய்

அடித்து நொறுக்கும்.

என்னாலும் சாபம் இட முடியும்

எந்நாளும் நலம் வாழ்க

என்கின்றேன்

என்ன செய்ய?

"அண்ணா" என

எனை விளித்து

நீ கட்டிய

ஒற்றை கயிறுக்காக

😝😝😝😝😝😝😝

by பாலா

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now