விசித்திர விநாடிகள்

41 6 0
                                    


இன்னும் இந்த பூமியில் தான்

நானிருக்கின்றேனா?

இல்லை இயற்கை எனக்கு

மட்டும் சதி செய்ததா?

புவி ஈர்ப்பு பொய்த்து போனதோ?

உச்சந்தலையினிலே

ஒட்டு மொத்த குருதியும்

குடிபெயர முற்படுவதன் காரணம் என்ன?

நாடி தளர்ந்து

நடுக்குவாதம் வருதல் போல்

சமிக்கைகள் வந்தது ஏன்?

என் நுரையீரல் காற்றில்

பிராண வாயு

இல்லாதது போல் திணறுவதேன்

என் அடிவயிற்றில்

பனிக்கட்டியை பார்வையாலே

திணிக்கின்றாய் பாவி

மந்தை போல் இத்தனை பேர்

இருந்தும் உன் பார்வை

கத்தியை என் மீதே வீசுகின்றாய்

சூரியனை கண்டும் கூசாத என் விழிகள்

உன் ஓரப்பார்வையில்

கழுத்தொடிந்து

போவதேன்?

நேற்று நெடுநாள் சிந்தித்து

எழுதிய காகிதம்

உன்னை கண்டதும்

வெளிவர மறுப்பது ஏன்?

அய்யோ?!

இதயம் இத்தனை வேகமாய்

துடிப்பதன் காரணமென்ன

உன் காலடி ஓசைக்கு

இசையமைக்க முற்பட்டதோ?

நீ இல்லாத போது

முற்றுப்புள்ளி வைக்கின்றேன்.

முன் வரும் போது

முயற்சித்து எழுதுகின்றேன்.

உன் பிடரியிலும்

பிரம்மன் இரு கண்னை வைத்து

படைத்தானோ?

முந்நூற்று அறுபது பாகையிலும்

உன் முழுக்கவனம்

செலுத்த வேண்டியது தானே?

மூலையில் அமர்ந்திருக்கும்

என்னை மட்டும்

உறுத்து விழிக்க

உன் மூளை கட்டளைகள் இடுகிறதோ?

உன் வரவு

என் கரத்திற்கு

அசுர வேகம் கொடுக்கிறது

உன் நெருக்கம்

சிந்தனைக்கு

புத்துயிர் கொடுக்கிறது.

ஒவ்வொரு நொடியையும்

யுகமாய்

உணர வைத்து

இம்சை செய்வதில் உனக்கென்ன இச்சை?

இதற்கு முன் மனிதனை

கண்ணுற்று பார்த்ததில்லையா?

இல்லை என் உருவம்

உருமாறி தெரிகிறதோ?

இந்த விசித்திர விநாடிகளுக்கு

விடை தான் என்ன?

இதற்குத்தான் இறுதித் தேர்விற்காவது

படித்து விட வேண்டும்

எண்ணியவாறே

வெற்றுத்தாளை கொடுத்து விட்டு

கண்காணிப்பாளனை சபித்து விட்டு

வெளியேறினான்

அந்த குறும்புமாணவன்

இப்படிக்கு

வகுப்புத் தேர்வு

by  பாலா.

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now