கவிதை சிற்பி

108 2 2
                                    

கவிதையே !

நீயும்

நிழலும் மட்டுந்தான்

இறுதி வரை .

உலகம் என்னை

தாங்க கூடாதென்று

நழுவ விட்டு

வேடிக்கை பார்ப்பதாய்

ஓர் தோற்றம்.

அவ்வபோது தோன்றும்...

நீ எந்தன்

எண்ணச் சிறகாய் விரிந்து

காற்று வெளிதனில்

தூக்கி நிறுத்தாவிடில்

என் உணர்வுகள் என்றோ

தூக்கு மேடையை

முத்தமிட்டிருக்கும்.


என் கண் கலங்கி

கை நடுங்கும் போதெல்லாம்

 ஊன்றுகோல் தேடி அலைவதில்லை.

எழுதுகோல் பிடித்துன்னை

அரவணைக்க துடிக்கின்றேன்.


எழுதுகோல் மையுடன்

என் கண்ணீர் புரியும்

இரசவாதம்

உன் கவிதை மொழி பேசும்..


 உவமை கூட கிட்டாது

வறுமையாய் சில நேரம்

உன்னை நான் வாட

விட்டதுண்டு.

அப்போதும்

உணர்ச்சி யொன்றே

உடமை என போதுமென்று

உணர்வு கொடுத்தது நீதான்.


தனிமையில் 

நான்... என்னுடன் நீ

எனக்குள்ளே எண்ணங்களாய் நீயும்

உனக்குள்ளே உணர்வுகளாய் நானும்

எனக்கு நீ காதலியோ?

 ஏன் ஊடல் நிகழ்த்துகிறாய்?

சில சமயம்

விடா மழையாய்

சில சமயம்

வெட்ட வெளியாய்.


கனவினில் உன்னை

கைப் பிடித்தாதாலும்

கனந்தனில் கலையாத

மாயம் அது.....

மனமொடிந்த

நிலைதனிலும்

காட்டாறாய் என்னை

கட்டவிழ்த்து

ஓட வைத்தாய்.


சிற்பம் வடிக்கும்

சிற்பியை உலகறியும் !

சிற்பியை செதுக்கும்

சிற்பங்களை யாரறிவார்?

அந்த சிற்பி நான் - ,

எனக்குள்

உணர்வை செதுக்கும்

சிற்பம் நீ '

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now