வரவேற்பு மடல்

664 2 1
                                    


புராண காலத்தை
இங்கு யாரும் பார்த்ததில்லை
பார்த்தவரோ இங்கில்லை

ஆனால்
இங்கு ஓர்
சரித்திரம் படைக்கவிருக்கிறது.

இதோ இவ்வறை

பாஞ்சாலி துகிலுரிதற் பொருட்டு
துக்கம் தாங்கி நின்ற
அஸ்தினாபுர அவைக்களமாய்
பலருக்கு தோன்றலாம்......
இதோ சித்த சிற்பிகள்
100 பேர்களும்
கெளரவர் கூட்டமாய்
கண்ணுக்கு தென்படலாம்.....
ஆம்
ஒருவாறு அவ்வாறு
கொள்தலும் ஏற்புடையதே,
எவ்வாறு நீதி உரைப்போர்
நீதியரசரோ
இங்கு
புதுவர்களாக வந்த உங்களை
எங்கள் சகோதர சகோதரிகளாக
கெளரவப்படுத்தப் போகும் எங்களை
உலகம் கெளரவர்கள் என
புகழ்வதால்
கெளரவர் என்ற சொல்லுக்கு
ஏற்பட்ட களங்கம் நீங்குவது நிச்சயம்.


இதோ இத்தகு தருணம்

இனி என்று வரும்?
எத்தவத்தால் விளையும் ?
பாரதம் கூட ஒரு குருவைத்தான்
பெற்று மகிழ்ந்தது
இங்கே .... பார்க்கும்
இடமெல்லாம் இறைவனையும்
மிஞ்சிய ஆசான்கள்
அகங்குளிர முகம் மலர
வீற்றிக்கும் விந்தைதனை...

இங்கே துகிலுரிதற் ஏதும் நிகழ்வதற்கு இல்லை

சிலரின் அறியாமை
துயிலை களையவிருக்கின்றோம்....
இங்கு அன்பு விதைக்கப்படவிருக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனும் கனியன் பூங்குன்றனாரின்
கற்பனையை
மெய்யாக்கவிருக்கின்றோம்.
எங்களின் புதிய
உறவுகளை உணர்வுகளால்
சூழவிருக்கிறோம்.


வாளால் அறுத்துச் சுடினும்

மருத்துவன் பால் மாளாகாதலுற்ற

பிணியினனாய்
சில சர்ச்சைகள் நம்மிடையே
தோன்றியதும்
புவிமீது காதலுற்ற கதிரவன்
கார்மேகம் பிளந்து
புவி அன்னையை ஆரத் தழுவி
கதிர்க்கரத்தால்
அணைப்பதை போல
சர்ச்சைகளை மூர்ச்சை செய்து
அளவளாவிக் கொள்வோம்.


இந்த நாள்

பலருக்கு பொழுதுபோக்கு
எனவோ
இன்னுஞ் சிலருக்கு
பொழுதினை போக்கவோ
என எண்ணி நகைக்கலாம்
இது செங்கலினால்
படைக்கப்பட்ட வெறும்மேடை
மட்டுமல்ல
இன்று இது மணமேடை
நிதர்சன உண்மை.
இருமனம் இணையும்
சிறுபீடமே மணமேடை என
ஊரார் ஒப்புக் கொள்வோர் எனில்
இன்று எங்கள்
சகோதரர்களின் மீதான உரிமையை
நிலைநாட்டவிருக்கின்ற
இரு நூறு மனங்கள்
சங்கமிக்கும்
மீமிகை உயர் பெரிய மனமேடை
இஃதெனில்
பிழை என கூற முற்படும்
மானிடரும் உளரோ?
இதற்கு அக்கினி சாட்சி
அவசியமில்லை....
வீற்றிருக்கும்
ஆசான்களே முழு முதற் சாட்சி
இந்த வைபோகம்
எண்ண எண்ண
களி தரும்
வையக போகத் திருநாளாய்
அமைவதற்கு
ஆசிவழங்க ஆசிரியப் பெருமக்களை
தாழ்வுடன் பணிக்கின்றோம்
இவண் சித்த சிற்பி

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now