காதல் சொல்ல வந்தேன்

82 3 1
                                    

காதலை
உன்னிடம்
எப்படித்தான்
சொல்ல வேண்டும் என்கின்றாய்?

மண்டியிட்டு
மலர்க்கொத்து நீட்டி
மல்லாந்து பார்த்து
என்னை மணப்பாயா என்றா?
நீ தான்புதுமை விரும்பி ஆயிற்றே !

வண்ணக் கலவை இடையே
சின்ன மோதிரம் ஒளித்து
சிறு வியப்போடும்
குறுநகையோடும்
வித்தையோடு விளையாட்டாய்
விருப்பந்தனை கூறவா?

நிலவுகின்ற காதலை
நிலவுதனில் மேடையிட்டு
நிலவுலகம் முழுதுமறிய
நேரடி ஒளிபரப்பாய்
நித்தம் நித்தம் நவின்றிடவா?

மொழி வளர
விழி பிதுங்கி
சிந்தை சிதறிட
வெற்றுத் தாளை கிறுக்கித் தள்ளி
கொற்றவைத் தமிழ் முதல்
கொடுந் தமிழ் வரை தேடி
பாவலரும், பாலகரும்
கொய்யாத கரு தேடி
உன் காலடியில்
கவிதை மழை பொழிந்திடவா?

சொல்லுகின்ற வீரமெல்லாம்
சொத்தையாகி விட்டதன்பே
வீரமில்லா பேடி என எள்ளி நகைக்காதே
வாள் கொண்டு இதயத்தை பிளக்கலாமே
என் சகியே
இதயத்தை அளக்க இயலுமா
வாள் முனையிலும்
எழுதுகோல் முனை
வலியதென்று அறிந்தேன்
என் தொண்டைக்குள் சிக்குண்ட
காதலை
உன் கவனத்தில் சேர்த்திட உதவியதே

அன்னப்பறவை இறகினிலே
அள்ளித் தெளித்த மைபோல
காதலை
கொட்டி விட எண்ணித்தான்
காகிதம் ஏந்தினேன்

எப்படி தொடங்க ?
அன்பென்றா ? அழகென்றா ?
ஆருயிரே அமுதே
ஐந்திணையில் விளையாத ஆழி முத்தே
தேனே திரவியமே தேவாரத் திருத்தமிழே
என்னவென்று கூற
உன்னை அறிந்தால்
உசிதமென்று உன்னை
எண்ணினேன்

மனமோ மாயமோ மாதவமோ
மாவரமோ?
செவி சேரும் கானமோ
ஒளிக் கீற்றோ பால் பற்றோ
மலை ஊற்றோ
மாஞ்சாறோ
கண் பறிக்கும் மின்னலோ? அவள்
காவியத் தென்றலோ
கனலோ கனவோ கார்முகிலோ
கானகத்திடை வளர்ச்செங்குயிலோ
மானிடரிடை வாழும் மாவிடமோ
கவியோ கவிதரும் களிப்போ
களி சாறும் கனியோ
கனிநல்குஞ் சுவையோ
சுவையூறும் சுதந்திர மோ
சுதந்திர தந்திரமோ
பிரம்மன் கை மந்திரமோ
மானோ மழையோ
மழையில் நடமிடு மயிலோ
மயில் கொள்ளும் மாருதமோ?

உண்மை தெளியும் முன்
மயக்கமாய் வருகிறதே....
விழிதனை மூடி
விடைதனை தேடுகின்றேன்









By பாலா

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now