ஆள்வது அவளது பணி

156 9 9
                                    


நெடு வானம் தொட்டு விட

எழும்பி நின்றதாம்

நெற்கதிர்.,

அதில் ஆயிரம் கோடி

நெல்மணிகள் ...

அப்படித்தான் இறைவன்

கோடியில் ஒன்றாய்

படைத்து விட்டான் என்னை ...

பத்து மாதம் பொறுக்கவில்லை

எட்டே மாதந்தான்

காரிருள் கொண்ட குகை விட்டு

கதிர்நோக்குந் தென்றலென

நெட்டி முறித்தெழுந்தேன்

கருவறை விட்டு.

சேற்றில் உழன்று திரியும் பன்றியாய்.,

இல்லையில்லை

பன்றி மனம் கொண்ட பதராய்

படைத்த அவனுக்கு

நன்றி சொல்லியே

நானிலத்தில் காலம் தள்ள வேண்டுமோ?

அணுவிற்குள்ளும் அணுவாய்

ஆள்பவன் என எண்ணி

அனுதினமும் ஆடுகின்றான் இறைவன் ....

எதை கண்டான் இறைவன்.,

எத்தனை கொண்டான்!

எதில் உயர்ந்தான்?

முக்கண் பெற்றதாலா?

முழு நிலவு கொண்டதாலா?

மூவுலகம் நிறைந்ததாலா ?

மாயம் கொண்ட உலகென்று

மடையன் இங்கு வர மறுக்கின்றான்.

மங்கையை மாயமென்றானா?

அவன் அறிவானா?

அந்தணன் கையாலே

அமுது கொள்ளும் அவன்

அன்னை ஊட்டும் அரிசிச் சோற்றை ..

அதன் சுவையை ?

அங்குசம் ஏந்தி

ஆனையை அடக்குவதை காட்டிலும்

அன்னையின் சிறு விரல் பிடித்து

அடங்கிப் போவதன்

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now