காதல் மடல்

163 2 1
                                    

Only for imagine and smile😝😝😝😝
ஒரு வழக்கறிஞர் மாணவன் கவித்திறனோடு காதல் கடிதம் வரைந்தால் ...

அன்பே,

      என் வாழ்வினை சட்டத்திற்கே அர்பணித்து வாழ்பவன் நான்.என் மனம் மொழி மெய் செயல் யாவற்றிலும் சட்டத்தின் சாயல் சம்பவித்திருக்கும். சட்டத்தினை மீறுபவர்கள் என்னை கொன்றொழித்த பாவிகள் . சட்டமே மன்னித்தருளினாலும் யான் மனங்குளிரேன். விதிவிலக்கான விடிவெள்ளி நீ மட்டுந்தான்.

  நீயும் சட்டம் அறிந்தவள் தானே! சட்டப் புத்தகத்தை சட்டை செய்யாது சாதாரணமாக திரிகின்றாயே! சாதுரியம் உனக்கு அதிகந்தான்...
     
   உயிர்வதை பற்றி இந்திய சட்டம் என்ன சொல்கிறது? அதைப் பற்றி உனக்கென்ன கவலை ... சிறு நாக்கு நுனி வரை சிற்றுண்டி உண்டு நிலவு சுற்ற மறந்தாலும் உலகமெல்லாம் நீ சுற்றி விட்டு ஆனந்த சயனம் கொள்கிறாய்! நானோ இங்கு அரிதுயில் கொள்கிறேன் தேவி ...அன்னஞ் சுவைப்பதை மறந்தேன். உடல் வெளுத்து இளைக்கின்றேன் ..... உயிர்நோக திரிகின்றேன். இந்த உயிர்வதைக்கு உரிய தண்டனை உனக்கு கிட்டுமோ?

போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உனக்கு பொருட்டாக தெரியவில்லையோ ? கண்ணுக்கு அழகாக மையிட்டு மறைத்து அகப்படாது கடத்துகின்றாய் போதைதனை பேதைப் பெண்ணே! உன் விழியும் மொழியும் கிறங்ெ டிக்கிறதே ....!.எத்தனை கலாம் சொன்ன இளைஞர்கள் இதனால் காலாவதி ஆனார்களோ!

இந்திய தொல்லியல் சட்டம்  தெரியுமோ? அது பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது. நீயோ இப்படி தேரிலே உலா வரும் திருமேனியென திரிகிறாயே .. தவறென உணராயோ ....

உன்னை பெயர் அறியா காரணத்தால் அன்பென ஒருமுறை மனதினுள் தான் அழைத்தேன். அது பொறுக்கவில்லையா உனக்கு ... உலகம் எனக்கு எத்தனை புனைபெயர் வழங்க வைத்தாய் ... நண்பன் எனை கிறுக்கன் என்றான் . வீட்டிலே வீணன் என்றார். ஆசான் அறிவு கெட்டவன் என்றார். முன் பின் அறியாரும் மூடன் என்றார். உன் திருக்காட்சி கான 
தெருவில் தவம் கிடக்கும் என்னை உன் பக்கத்து வீட்டு பொறாமைக்காரி காமுகன் என தூற்றுகிறாள்.என் சுயமரியாதை கொன்றொழித்த உன் மீது மானநஷ்ட வழக்கு போட்டால் செல்லாதென கூறுகின்றார் குடி கெடுக்கும் பாவிகள் ......

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now