தோழனின் சாபம்

5 1 2
                                    


மன்னிக்காதே  எனை தோழா
நான்  சுய நலங்களின் பிறப்பிடம்
கோழைத்தனத்தின் வாழிடம்
ஒட்டுண்ணியின்  புதுத் தோற்றம்
முழுதும் ஊனம் பெற்ற மனம்

தனிமையை தவிர்க்க
உனை தேர்ந்தெடுத்தேன்
உன் அமைதிக்கு அப்போதே குழிபறித்தேன்
என் சுமையை
உன் தோளில் சுமக்க விட்டேன்
என் பிதற்றலை
பிடிவாதமாய் கேட்க வைத்தேன்
அதற்கு விடை  சொல்லவும்,
வீணாய் சிரிக்கவும்
விருப்பம் கொண்டேன்

உன் இரகசியம் கசிய
காரணமானேன்.
வன் சொல்லை
வரவழைத்த  நீசன் ஆவேன்
உன் முதுகுப் புறத்தில்
வளர்ந்து விட்ட
ஒரு பெரும் களைச் செடி
நானாவேன் -
நீ தவிக்கும் போது தள்ளி நின்றேன்
தடுக்கி விழுந்தால் எள்ளி கொன்றேன்
எரிச்சலை மட்டுந் தான் என்னிடம்
நீ பெற்றாய்

இது விசித்திர உறவு
நீ எந்தன் வரம்
நானுந்தன் சோகம்
அவ்வாறிருந்தும்
நீ சோகம் கொண்டதுமில்லை
எனை சோகம் சூழ
விட்டதுமில்லை....
உன்
சோகத்தின் முடிவு
என்
மாய்தலின் தொடக்கமெனில்
இந்த நொடியே
தொடங்கட்டும்
உன் நல்வேளை
நட்பிற்கு நான் செய்யும்
சிறு தொண்டு

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now