தமிழாண்டு

30 3 4
                                    


ஐந்தாண்டுக்கொரு முறை

இங்கு

அரசியலும் ஆட்சியும்

மாறுவதோடு நிற்பதில்லை.

அறிவும் அனுபவமும் கூட

அதனால் தான்

சித்திரைக்கும் தைக்கும்

தமிழ் புத்தாண்டு மாறி மாறி

வருகிறது.


உதயசூரியன்.,

சித்திரை நித்திரைக்கு என்கிறது.

தையில் பிறந்த வழியை

இரட்டை இலை மறைக்கிறது ...

பாவம் தமிழன்னை இப்படியொரு

பிறந்த நாளை

கேட்டாரா?


ஒவ்வொரு கவியும் தமிழகத்தில்

பிறக்கும் போதும்

தமிழுக்கு பிறந்தநாள் தான்

அவன் எழுதுகோல் முனை

காகிதத்தை உரசும் போதெலாம்

தமிழுக்கு புத்தாண்டுதான்

ஆண்டை அளவிட அளவுகோல் வேறு

வேண்டுமோ?


கவிஞரின் இதய துடிப்பே

கடிகார நொடிகள்

இதில் இரவு பகல் என்றில்லை

ஏனெனில்

இங்கே நிலவும் கதிரும்

உய்வதும் இல்லை

உதிர்வதும் இல்லை

இங்கே வசந்த காலம்

மட்டுமே

வெய்யில் கொளுத்துமில்லை

மழை ஏழை கண்ணீர் கொள்வதுமில்லை

ஆண்டெலாம்

கொண்டாட இயலாத திருவிழா

இஃதொன்றே

அதனால் தான்

நாளொன்றை

வரையறுக்க எண்ணினர்

தீர்வும் கிட்டவில்லை

முடிவும் எட்டவில்லை


தமிழ் ஆண்ட நிலை

 மாறியதறியா மக்களிங்கே

 தமிழ் ஆண்டை தேடி

ஆண்டியாக கிடக்கின்றனர்


தமிழ் ஆண்டை 

எனினும்

விழாவை எண்ணி

பெருமூச்சு விடுபவர்களுக்கு

இந்த ஆண்டு

இனிய நாட்களாய்

இறுதி வரை

வாழ்த்துக்கள்


தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now