ராகிங்

41 4 3
                                    


வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்பால் மாளாக் காதலுற்ற நோயினன் கொள் மனதினனாய்

நானிங்கு மருத்துவராய் நீயுமிங்கு......

கேளாக் காதினன் போல் திரிந்திருந்தாலும்

முன்னவர் கேளிக்கை எங்கள் முகம் சுழிய

வைத்திருந்த அநேக நாட்களின் 

ஞாபங்கள் இன்னும் நெஞ்சம் விட்டு அகலவில்லை....


நிலம் நோக்கி நிலம் மட்டுமே நோக்கி

நிலமடந்தை என திரிந்த ஒரு சிலரை

நாணஞ் சொக்கி நாவில் சொல் தேக்கி

கண்ணிலே நீர் தேக்கி

கல்லறையிலே புதைந்து விடாது

பாரதியின் புதுமை பெண்ணையும்

கலாமின் கனவு இளைஞனையும்

தொலைநோக்கு கொள்

வான்நோக்கி செல்

என  மாற்றச் செய்தது 

 முன்னவர்கள் செய்த "ராகிங்"


இந்த ராகிங் கிற்குதான்

எத்தனை பாரம்பரியம்.....

வக்கிரத்தை வலியத் திணிக்கும்

வறண்ட இதயத்தின் வறுமைப்போக்கு

அதைப்பற்றி கூற  விழையவில்லை .


வாலிபம் முறுக்கேறி 

அழகு மெழுகேறி

இந்த கல்லூரிக்குள்ளே புகுந்த எங்களை

வஞ்சின சிரிப்புடன் முன்பக்கம் வரவேற்றர்

முன்னவர்கள் சிலர்.


எங்களுக்குள்ளே உலக அழகிகளையும்

உருமாறி திரியும் நடிக திலகங்களையும்

தோலுரித்து காட்டிய கலகக்காரர்கள் 

அவர்கள்.

எங்களுக்குள்ளிருந்த சின்னக்குயில் சித்ராவையும்

நடன புயல் பிரபுதேவாவையும் கண்டு பிடித்த

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now