காதல் ஒரு வெங்காயம்

47 2 1
                                    

காதல் காதல் காதலென்று

கேட்டுக் கேட்டு 

காது கேளாது

கோளாறு கொள்ளும் நேரம்....


காதலில் விழுந்த நிலையும்

காதலால் வீழ்ந்த கதையும்

குவியல் குவியலாய்

கொட்டிக் கிடக்க 

காதலை பற்றி அறிந்திடத்தான்

கழுத்தை திருப்பி

கண்களை உருட்டி

காது கூறாக்கி

 காத்திருந்தேன்.....கவனித்தேன்....


காதலுக்கு என்ன தேவை?

கேட்டறிய முற்பட்டேன்

கேள்வியே தவறென்றான்

ஒருவன் .

காதலிக்க என்ன தேவை?

 ஆணென்றால் 

அவசரம் கூடாது

பெண்ணெண்றால் 

பெருந்தன்மை வேண்டும்

 என பதிலுற்றான்

புரியாமல்  முழித்தேன்.


காதல் ஒரு வெங்காயம்.

தோலுரித்தல் தொழில்தர்மம்.

கண்ணீர் வெறும் இடையூறு.

காலந்தள்ளுதல்  இதன் நோக்கம்.

குப்பையொன்றே மீந்தும்

 நாள் கடப்பின்  நாறும்

நழுவி விட்டால் தேறும்.


காதலியை அழைக்க 

என்ன சொல் வேண்டுமென

புதுப்பட வசனகர்த்தா

புனைந்து வைத்திருப்பான் .

"அண்ணா" என்றழைப்பாள்

நாயகி தன் நாதனை

அம்மாதத்திற்குரிய சொல்

அது தான் .....

அடம் பிடிக்காதே

 ஏற்றுக்கொள்ள....

அநாகரீகனென

அவளோடி  மறைந்திடுவாள்


வங்கிக் கணக்கு இருக்க

வேண்டுமதிலே, வேண்டிய மட்டும்

பணம் இருக்க வேண்டும்

தாராள குணம் இருக்க வேண்டும்

தாரை வார்த்த செல்வமனைத்தையும்

தாங்கும் மனம் இருக்க வேண்டும்

பொடி வைத்து பேச வேண்டும்

இரவெல்லாம் விடியுமட்டும்

நிறுத்தாமல் அளாவ வேண்டும்.

பரிசு மழை நனைக்க வேண்டும்

சாகசங்கள் நிகழ்த்த வேண்டும்.

தோழியர் முன் தோள் முட்ட

பேசி சிரித்து நடிக்க வேண்டும்


கட்டளைகள் கூடாது 

கண்டிப்பு  கூடாது

கேள்விகள் வேண்டாமது

சந்தேகம் வேண்டாதது....


ஐந்தாம் காதலியை தேடுமவன்

ஐயத்திற்கு  இடமின்றி

அழகுற பொழிப்புற்றான்.

அடடா காதலே

அருகில் நீ  வாராதே

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now