காதலோடு விளையாடு

19 1 1
                                    


காதல் விதை.... கவிதை மழை

உன் கண்ணொளி... உயிர் சுவாசங்கள்

முளை விட்டதெந்தன் மனதில் வலி


நெஞ்சில் வேர் பாய்ச்சினாய்

நான் கண்ணீர் ஊற்றினேன்

பூ மலர்ந்ததும் தான்

புன்னகை வீசினோம்


இனப்புயலில் தான் இலை அசையுதோ

அன்பில் விழுதுகள் நிலம் தேடுதோ

விரசம் தோன்றி நஞ்சேற்றுதோ

விரல்களின் உரசலே  உரம் போடுதோ


காதல் கனியும் 

கனிந்த காதலின்

விதையை மீண்டும் மீண்டும்

மனதினில் விதை விதை


காதல் நிலா ....ஊடல் உலா...

யாமக் குளிர்.... அமைதிப் புயல்

அமைந்த தருண அரங்கேற்றமோ


 இருவர்விழி பேசும் இரவின் மொழி 

இதயம் பிழியும் எண்ணப் பிழை

உணர்வுகள் இல்லா நானொரு ஏழை

நீ வந்து என்னுள் காதல் இழை


விண்மீன் பொறுக்கி   விளையாடுவோம்

விடியாதிருக்க விலை கோருவோம்

விலையாக கொடுப்பதற் கெதுவுமில்லை

கதிர் முளைத்தாலும் காதல் தீர்வதில்லை


 இருண்ட வெளி 

இல்லாத இடைவெளி

இனி இருவர் நிலையும்

மழலை வழி........

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now