காலப் பிழை

33 3 1
                                    


தெள்ளுத் தமிழும், தேனமுதும்

தெவிட்டாத உன் மொழியும்

கேட்டுக் கிறங்கி ....

  துயில் கொண்ட நினைவுகளும்

உள்ளத்தெழுந்து உருக்குலைந்த 

உணர்வுகளும்....

புதைத்து விட்டு புன்னகைக்க

முயல்கிறேன் .........

மூடன் நான்!

 புதைக்கவில்லை  நெஞ்சில் ஆழ

விதைத்திருக்கிறேன்.

நேசித்தலுக்கு

காரணம் கொண்டால்

உணர்வுகள் ஒப்பந்தமாகி விடும்

தெளிவில்லாத நேசம்

பிதற்றலாகி விடும்.

என் நிலை இதில் யாதோ?

உணர்வோ? ஒப்பந்தம்மா? 

ஒன்று மற்ற பிதற்றலோ?

நீல வான் வழி நெடுக

பனி  தூற்றிக் கொண்டிருக்கும்

திங்கள் தரு குளிர்கதிரும்

மலர் பொழி சுகந்தமும்

தென்றலில் தவளும்

இவையனைத்தும் இரசிக்க

மறந்த துறவி நான்...

உன் அணைப்பின்

சுகம் பெற்றதால்

என் உணர்வுகளை

மடல் கொண்டு சேர்த்திட

மடையனல்ல நான்.

தொடக்கத்திலே இடர் வரும்

உடல் உயிருக்கு

எழுதிய மடலுக்கு

எவ்விதமாய் முகவரி 

 இடுவது?

என் உணர்வுகளும்

உடைமைகளும்

உன்னிடமே ஒப்படைக்கிறேன்.,

 பொருட் பிழை?

அவை இரண்டுமே

எனக்கு நீ தானே !

உன்னை உன்னிடமே

ஒப்படைக்க 

இந்த இடையன் யார்?

உலகில் உதித்த போது

நான் அறியவில்லை

 இது நீர் சூழ்நிலமென்று...

வளரும் போது 

அறிந்து கொண்டேன்

நீயும் தனி உலகென்று...

 அன்றில் பறவைகள்....

இரட்டை கிளவிகள்....

இவை

காலப் பிழையினால்

தனித்து பிரிந்து போயினும்

எழுத்துப்பிழையோ

இலக்கண முறையோ கூட

நீ - நான் என இலக்கணம் கூட

நம்மை பிரிக்காதிருக்க

முனையட்டும்!

தாயும் பிள்ளையும் ஆனாலும்

வாயும் வயிறும் வேறு என 

எதுகை மோனையுடன் 

எழுதிய வள்ளல்

கொஞ்சம் என்னை

பார்க்கட்டும்...

இது வெறும் தத்துவப் பிழை

என தெரிந்து கொள்வான்.

இவை ஒருபுறம் 

இருந்து விட்டு போகட்டும்

 நாம் பிரியும் காலம் வருமோ?

தினவெடுத்த திரிந்த எனக்கு

கல்வி  "கலகம் ' மூட்டியது

வீட்டில் நீயும்

விடுதியில் நானும்..

நினைவினை மட்டும் உணவாக்கி

இதயத்திற்கு இதமளித்து வாழ்கின்றோம்.

நெடுநாள் காணாது   இப்பிரிவு

விசும்பின் துளி நீர்

வீழாத காலத்து உழவனும்

நீ

விசும்பி துளி நீர்

வடித்த நேரத்து இவணும்

வேறில்லை அம்மா !

கல்லூரி விடுதியில் கழித்த முதல் நாள்

நேரத்து கண்ணீர் வரிகள்

by Bala

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now