விழி திற நிலவே

16 2 2
                                    


மெல்ல மெல்ல விழி திறப்பாய்

மெல்லிசையாய் சொல் உதிர்ப்பாய்

கொல்லும் உனது புன்னகையில்

முகச் சுளிப்பு கலந்திருந்தால்

சிப்பிக்குள்ளே சந்திரன்

சிக்கியதாய் சிறு சலிப்பு


ஆயிரம் ஆண்டுகள்

துருவிப் படித்தாலும்

அறிய இயலா அற்புதம் நீ

ஐந்து நொடியுள்

கற்றவெண்ணிய அற்பன் நான்


பூமி உருண்டை என்பதனால்

வான் பார்க்க எவரும்

புவி தோண்ட கருதியதில்லை

உன் உலகை துளைத்து பார்க்க

உளி ஏந்திய சிறு பிள்ளை நான்

 யுவம் வேண்டும்.... பல யுகம் வேண்டும்

தொடர்ந்து நீளும் கனவுத் திட்டம்....

முடிவுமில்லை..... முடியவுமில்லை......


முடிசூடிக் கொண்டவனும்

முழுதாய் எதுவும் பெற்றானில்லை

மனம் முடித்து கொள்கின்றேன்.

நினை மணம் சூடிக் கொள்வேனே !

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now