ஃ 67 ஃ

7 1 0
                                    

என் வாழ்வின் அர்த்தம் தேடி

நான் அலைந்த நாட்கள் அதில்

கொட்டி தீர்த்த மேகம் நடுவில் மிளிரும்

கீற்றோளியாய் நீ தோன்றி மறைய


உன் முகம் காண மலை தாண்டி

உன் குறல் கேட்க கடல் கடந்து

உன் விரல் கோர்க்க விண் புகுந்து

உனை சேர நான் தவித்தேன்


நீ சென்ற திசைகள் அதில்

நீ பார்த்த காட்சி எல்லாம்

நான் பார்க்க ஆசை கொண்டேன்

உனை அன்றி எல்லாம் மறந்தே..!

பிறர் வானில் மிளிரும் உனை

என் வானாய் காண விளைந்து

வரைந்திட்ட சுவர் எங்கும் உன்

வண்ணத்தை விட்டு சென்றாய்..!


வழி நெடுக உனை எண்ணி

நான் கடக்கும் பாதை எங்கும்

உன் நினைவை சிதறி சென்றேன்

எனை சூழ்ந்த உன் நினைவதில் நீந்தி

என் உயிர் தேடி நான் அடைந்தேன் - உன்னில்..!


கானல் நீ(ர்)Where stories live. Discover now