ஃ 27 ஃ

63 5 3
                                    

இன்னும் சில வாரங்களில்
அவளது காதல் திருமணம்..

காதலனை கை பிடிக்க போகிறோம்
என்கிற ஆர்ப்பரிப்பு..

பல கனவுகள் தழுவிச் சென்ற அவள் கண்களில் அன்று ஏனோ ஒரு திடீர் ஏக்கம்

"நீ அவனை மட்டுமா காதலித்தாய்???

இல்லை..

பின்பு?????

ம்ம்ம்..

நான் கவிதையைக் காதலித்தேன்

நல்லிரவின் நட்சத்திரம் காதலித்தேன்

தனியே திரையரங்கில் படம் பார்ப்பதை காதலித்தேன்

நீண்ட தூர பயணத்தைக் காதலித்தேன்

மண் வாசம் காதலித்தேன்

மழை மேகம் காதலித்தேன்

எழுத்தைக் காதலித்தேன்

நல்லெழுச்சியைக் காதலித்தேன்

நாய்க் குட்டியின் தளர் நடையைக் காதலித்தேன்

பிறர் மறந்த போதும் என் பிறந்த நாளிக்கு நானே அளித்த பரிசைக் காதலித்தேன்

என் குடும்பம் காதலித்தேன்

என் நட்பைக் காதலித்தேன்.....

இத்துணைக் காதலா???

ஆம்...

ஓ.. ஆக, இத்திருமணம் உன் அத்துணைக் காதலையும் நிறைவேற்றுமா???? "

பதிலற்று முழித்தாள்..

தன் காதல் அனைத்தும் நிறைவேமா என எண்ணி...

கானல் நீ(ர்)Where stories live. Discover now