ஃ 64 ஃ

10 1 0
                                    

விரல் கோர்த்து

விழி பார்த்து

மொழி சிந்தும் போது

மனம் எங்கும் பெய்யும்

தொடர் மழை நீயே...

மழை மேகம் நீ அல்ல

நான் பறந்து தொலையும்

முழு வானம் நீயே

எனை தாங்கும்

என் வையம் நீயே...

விதி தூது இதுவோ

விடை தேடும் கனவோ

நதி செல்லும் தூரம்

நான் சென்று சேரும்

என் கடல் நீயே....

இருள் சூழும் போதும்

மனம் நோகும் போதும்

இதம் தேடும் என்னில்

படர்ந்து ஒளிரும்

வெந்தனல் நீயே....

நமை பிறித்த வெளி களைய

காற்றதை பற்றி

கரத்தினில் ஒளித்தேன்

நீ அதை தேடித் திறக்க

கரம் உள்ளே சிறகடிக்கும்

காதல் பட்டாம்பூச்சி....!

















கானல் நீ(ர்)Where stories live. Discover now