ஃ 51 ஃ

21 4 0
                                    

என் வானின் ‌மின்னல்‌ அவன்

ஓர் நொடியே வெளிச்சம் காட்டி மறைந்தான்...

மின்னல் பதித்துப் போன காட்சிகள் பலவும்

கண் மூடும் நொடி எல்லாம் என்னுள் தூறல் போல்...

நெஞ்சுருகி நேசித்த நாம்‌ ஏனோ

நேர் எதிராய் ஆனதென்ன...

என் வானின் கார் மேகம்

உன் வானில் கதிர் காலம்...

என் மனதில் கற்கொண்டு கட்டி வைத்தேன்

நீயே தகர்த்தாலும்‌ தானாய் துளிர...

காதலின் கால் தடம் - என்

வாழ்வில் நீ காதல் நட்சத்திரம்...

காத்திருந்த காலம் எல்லாம்

உன் கைதேடா நாட்கள் உண்டோ?

கண்ணீரே கடலாகி அதில் நானும்

நினைவலையில் மிதக்க கண்டேன்...

கறை பாராக் காதல் நாம் - இன்றோ

கரம் சேரா ஊடலின் துணையில்...

நாம் சென்ற சாலை நடுவே

ஓர் பூவாய் வாடி நின்றேன்...

உயிர்பாயோ‌ என்னை...?

உன் நினைவில் நான்.. தனியே.. இணையே..

கானல் நீ(ர்)Where stories live. Discover now