ஃ 63 ஃ

16 3 0
                                    

இருள் தோன்றும் ஒளி

நீ என்னில்..

இதழ் பேசும் தமிழ்

நான் உன்னில்...


தீரா மழை வேண்டி

தவிக்கும் வனம் நடுவே...

துளி வந்து சிரம் தொட

தழைக்கும் ஆல் போல்

விழுந்தும் விழுதாவோம்...


உனை ஏந்தியே வலம் வரும்

என் எண்ண அலை அதில்

மிதந்த நிலவொளி நீ

எந்தன் முடிவிலி....


தேடல் கனா எங்கும்

உன்னை ஒளித்து வைத்தே

துயில் கொள்ளும் நேரம்

விழிப்பைத் தேடி தொலைத்தேன்...


வான் விட்டு மண் சேர

நாம் கடந்த பாதை எல்லாம்

பூஞ்சோலை பூத்திருக்க - அதில்

நாம் நனையும் இதுவோ

தேன் தொட்ட பூவிதற் காதல்.?

கானல் நீ(ர்)Where stories live. Discover now