ஃ 61 ஃ

11 2 0
                                    


நெஞ்சே நெகிழாதே

நேரம் தொலைக்காதே...


வந்தவர் போனவர் எல்லாம்

வாழ்விலே வீசும் தென்றல்

நீ வந்த பாதை நீயே அறிவாய்

தோளுக்கு தோள் என்றும் நீ தான் அறிவாய்...


மற்றோர் வசைபாட நீ மாறிடாதே

உனக்காக நீ மாற உலகே உனது

வாழ்வே வெறுத்து உனை உதைக்கும் போதும்

கால் ஊன்றி எழுந்திட காலம் உனது...


தீ தீண்டும் தங்கம் தான்

தேர் உலா போகும்

நீ நீந்த கடல் கூட

கானல் ஆகும்....


வாழ்வின் விடை வெற்றி அல்ல

தோல்வி ‌என்பேன்

அதன் வலி தரும் வலிமை அன்றி

எதற்கும் எங்கும் நீ நெகிழாய் நெஞ்சே!!!!








கானல் நீ(ர்)Where stories live. Discover now