ஃ 43 ஃ

44 3 4
                                    

இணை எனில் நான்

கை பிணைத்திருக்க

நீ திளைத்திருப்பாய்

கண் பதித்திருப்பாய்

நாம் தவித்திருந்தோம்

யாம் சிலிர்த்திருக்க

தடை தகர்த்திடுவோம்

வினை கடந்தும் வாழவே

என நினைத்திருக்க

மனம் புதைந்திருந்தேன்

அதில் மலர்ந்திருந்தாய் உறவே...








இருள் படர்ந்திருக்கும்

என்னில் துளிர்த்திட்ட விடியலா நீ

தடம் காட்டி மறைந்திருந்தாய்

நான் தொலைத்தாலும் கண்டெடுக்க

எண்ணத்தில் வரும் முதலெழுத்தாய்

என்றும் நிலைத்திருப்போம் நாம்

எதை நினைத்தோம் அதை

விதைக்கவே தோன்றினோம் உரமாய்

தரம் குறையா‌ தளர்வடையாத்

தீயென இறுகப் பற்றிவிட்டாய் உயிரே...

வாழ்ந்திடுவோம்.. தணிந்த பின்னும் 🔥




கானல் நீ(ர்)Where stories live. Discover now