ஃ 59 ஃ

9 2 0
                                    

மொழி அறியா காலம் தொட்டே

மலர்ந்திட்ட நேசமிது..

அதை மறக்கவும் முடியுமோ

மறுக்கும் என் உள்ளம்...

நீ செல்லும் பாதையெல்லாம்

நந்தவனம் நட்டு வைத்து

உன் கால் பட காத்திருக்கும்

சருகாக நான் தவித்தேன்...

உன் சிரிப்பில் உயிர் உணர்ந்தே

அதன் இசை கொண்டு எனை மீட்டேன்

உன் அகத்தின் அழகெல்லாம்

தளிர் முகத்தில் ஒளிருதடி...

உன் கூந்தல் கொடியாக்கி

அதில் மலர்ப்பூவை கொய்து கோர்த்தேன்

காற்றதில் அக்கொடி அசைய

என் மனம் உடன் பறந்ததடி..

உன் ஏக்கப் பார்வைச் சுழலில்

நான் தொலைத்த உள்ளம் இன்றும்

மீளாமல் மூழ்குதடி

மாழாமல் சாகுதடி..

கடல் ஆழம் நான் அறியேன்

உன் கருவிழியை காணும் முன்

திடல் பலவும் தேடித் திரிந்து

உன் காலத்தடத்தில் நான் கால் பதித்தேன்....

கண்ணம் ஏந்திய கைகள் இன்றோ

காற்றை வருடி காயுதடி

எண்ணம் எங்கும் உனை வரைந்தேன்

அதில் வண்ணம் பூச வாராயோ நீ..!











கானல் நீ(ர்)Where stories live. Discover now