ஃ 74 ஃ

4 0 0
                                    

காலச் சுழல் ஊடே அவள்...

நிகழ்வுகள் பலவும்

அமைவு மாறா...

கற்றவை ஏனோ

அமைதி தாரா...

ஆதியும் அந்தமும்

பாதியில் பிறள...

ஒளி இன்றி

மனம் தளர...

வான் நோக்கிதன்

வலி‌ தீர்க்க வேண்டி...

தான் செல்லவோர்

வழி‌ வார்க்கக்‌ கோரி...


தோற்றும் துவண்டும்

ஆழ் கண்டு மலைத்தும்...

காற்றில் கலந்த தன்

எண்ணச் சிதறல் பற்றி...

மீளும் நாள் பார்த்து

மூழ்கி மறைந்தாள்

உதிர்த்த கனவொடு நெய்த

காலச் சுழல் ஊடே அவள்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 30 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கானல் நீ(ர்)Where stories live. Discover now