ஃ 37 ஃ

42 5 2
                                    

கண்களில் காதல் பெருக

கைகளைக் கோர்த்துக் கொண்டு

கனவாடிய பொழுதில் நாம்

காலாற நடக்கையில்

காற்றும் இனித்தது...


நேரம் அறிந்திராத

உரையாடலின் நடுவே

நீ சொல்லும்

ஐ லவ் யூ

இசையோடே என்றும் ஒலித்தது..


என் அன்பு அனைத்தும்

உன்னிடம் அடைக்கலம் தேட

மனம் முழுதிலும்

உன்னை நிறைத்து வைத்தேன்

தொலைத்திடக் கூடாதென...



வருடங்கள் பல கடந்து

என் வானாய் நீ ஆகிவிட

இன்று, வான் வெளியில்

சிறு துகளானதோ

நம் காதல்....


மலர் கொண்டு

அத்துகள் சேர்ந்து

பூங்கொத்தாய் நான் தவிக்க

மணந்திடாக்

காகிதக் காதல்....!

கானல் நீ(ர்)Where stories live. Discover now