ஃ 71 ஃ

6 0 0
                                    

காலம் நின்றிடா நாட்கள்

காற்று சென்றிடா இடம்

கற்றும் பயனற்ற பாடம்

கண்டும் பற்றிடா மலர்

தாகம் தீர்த்திடா தண்ணீர்

தாக்கம் தந்திடா எண்ணம்

தவிப்பு உணரா உறவு

தாளம் தங்கிடா பாடல்

நோக்கம் அற்ற பயணம்

நன்றி மறந்திடா நெஞ்சம்

நாற்று நட்டிடா வயல்வெளி

நயம் குன்றிடா மொழி

பார்த்தும் மறந்த தேதி

பற்று நீங்கிய உள்ளம்

பசி தோய்ந்த கண்கள்

பற்ற பிடிப்பில்லா திண்ணம்

ஆக பல நிகழ்வுகள்

பல நூறு பாதைகள் கடந்து

நீ  நிற்கும் இடம் கண்டு

நகைப்பார் ஆயின்

உரக்கச் சொல்வோம்

தீண்டிக் கடக்க

தென்றலோ வாழ்க்கை?

தகிக்கும் தீ அது!

வீழ்ந்தும் பொன் ஆவோம் என்று.!






கானல் நீ(ர்)Where stories live. Discover now