ஃ 66 ஃ

14 2 0
                                    


பார்க்காத வண்ணம் போல்

வாழ்க்கை செல்ல

ஏற்காது என் உள்ளம்

உனக்காக ஏங்க


தீரா குறைகள் பல - அதன்

தீர்வாக நீ நேரில் நிற்க

ஆறாத காயம் எல்லாம்

அகம் தாண்டி

அகலக் கண்டேன்..


நான் கொண்ட அன்பின்

எல்லை தான் ஏதோ?

வான்வெளி பரப்பும்

அதில்‌ சிறு புள்ளி தானோ..


தோன்றும் ஒளி நீ

தீண்டும் கதிர் நீ

முடிவிலா கடல் நீ

எனை தாங்கும்

என் உலகும் நீ


காத்திருப்பின் சுவை

உணர்த்தி சென்றாய்

அதில் கரைந்து - உனை

நினைவில் சுமந்த நொடியில்

நானும் ஒர் தாயானேன்.!

கானல் நீ(ர்)Where stories live. Discover now