ஃ 60 ஃ

11 2 0
                                    

கார் மேகம் கண் சிமிட்ட

கடல் சேரும் மழைத்துளி போல்

உடல் தள்ளிச் சென்றாலும் - எனைத் தீண்டும்

தொடு வானம் நீ தானே...!!!

உன் விரல் கோர்த்து விண் அளந்து

கண் பார்த்து அதை மறந்து

உன்னில் தொலைந்தே நான் வாழ

என் எண்ணம் மீட்பாயோ நீ?

நாள் நேரம் கடந்தாலும்

தோள் சாய்ந்தே உறைவோம் நாம்

உன் தேகச் சுடர் அதிலே

நான் ஒளிரா நாட்கள் உண்டோ?

வான் தொட்ட மரம் பூத்த

மலர் நீ என் கண்மணியே

உனை அள்ளி பற்றி அணைத்து

கொஞ்சிடவே ஆசை கொண்டேன்

என் கண்ணில் குழந்தை அல்லோ

என் நெஞ்சின் தேடல் அல்லோ நீ???

நான் கண்ட கனவெல்லாம்

உனை ஏந்தி ஏங்கி நிற்கும்

என் வானின் தேயா நிலா

நீ என் வாழ்வின் ஓயா விழா..!!!

கானல் நீ(ர்)Where stories live. Discover now