ஃ 42 ஃ

35 4 4
                                    

தந்ததும்

பெற்றதுமாய்க்

காதல்.

கையினுல் நுழையா

அதன் அர்த்தங்கள் புரியா...

மென் காற்றென நினைத்தால் தன்

கணம் காட்டிப் போகும்....

புழுதி தான் ‌என்றிட அது

பூவாய் அரும்பும்..

அடர்வனம் என்றினும்  அது

வெறும் வெளியாகி மறையும்..

அதில் மழைத்துளி விழக் கண்டு

வெந்தனல் உருகும்..

திரைதனில் தெரியும் காவியமாய்

தோன்றி பின் ‌மறையும் பல...

முழு நிலவாய் மயக்கிய பின்

தேய்பிறையாய் தணியும்...

கடலெனக் கரைதாண்டி உன்

மனம் அதில் புகும்..

தினம் நிதம் வரும்

அது மாயையை அல்ல..

மெய்.

இப்படி, நாம்

தந்ததும்

பெற்றதுமாய்

காதல்.

எங்கும் ‌எதிலும்.‌ ❤️








கானல் நீ(ர்)Where stories live. Discover now