அனிச்சம் பூ 56

2.7K 102 92
                                    

ரவின் இருளைச் சிறிது சிறிதாய்க் கொள்ளை கொண்ட வெள்ளை விடியல் ஆரம்பித்திருந்தது , செந்து கொல்கட்டாவின் ஒபராய் ஹோட்டலின் அறையின் சாளரத்தின் வழி இலக்கற்ற வெற்றுபார்வையைப் பதித்திருந்தான் , அவன் சிந்தனை முழுவதும் அவன் கேள்விபட்டு உறுதிபடுத்தியச் செய்தியிலேயே இருந்தது ,

அந்தச் செய்தி , ரஷ்மியின் பசுப்பிக் லெதர்ஸ் கம்பெனியின் 80 % பங்குகள் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்டச் செய்தி , இதைக் கேள்விபட்டு , சென்றமாதத்திற்கான கொல்கட்டா பிஸ்னஸ் நியூஸில் பார்க்க அதுவும் அந்தச் செய்தியை உறுதி செய்திருந்தாலும் , பங்குகள் கைம...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அந்தச் செய்தி , ரஷ்மியின் பசுப்பிக் லெதர்ஸ் கம்பெனியின் 80 % பங்குகள் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்டச் செய்தி , இதைக் கேள்விபட்டு , சென்றமாதத்திற்கான கொல்கட்டா பிஸ்னஸ் நியூஸில் பார்க்க அதுவும் அந்தச் செய்தியை உறுதி செய்திருந்தாலும் , பங்குகள் கைமாறியது குறித்த அதிகாரப் பூர்வத்தகவல் இன்னும் வெளியிடப் படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது ,

சென்னையில் நேற்று இந்த செய்தியைக் கேள்விபட்டதில் இருந்து அவன் மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை , ' ரஷ்மி ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் , அவள் இளமைப் பருவம் , மேற்கல்வி , மகிழ்ச்சி , என அத்தனையும் தியாகம் செய்து உருவாக்கிய அந்தக் கம்பனியை விற்க எப்படி இவளுக்கு மனது வந்தது , என்ன ஆயிற்று இவளுக்கு , இந்த கம்பெனிக்காவும் , குடும்பத்திற்காகவும் தானே அவள் என்னோடு வாழ ஆசைப்பட்ட திருமண வாழ்வையே உதறித்தள்ளினாள் , ஏதோ ஒரு வகையில் இதற்குத் தானும் முக்கிய காரணம் ' என்ற குற்றஉணர்ச்சியும் அவனைப் பாடாய் படுத்தியது , ' அவள் என்னை பார்க்காமல் , என்னைக் காதலிக்காமல் இருந்திருந்தால் , அவள் நிம்மதியாக இருந்திருப்பாளோ ? '
செந்துவின் மனம் தவிக்க ஆரம்பித்தது , அவன் மனம் எதிலும் ஒட்டவில்லை .

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now