அனிச்சம் பூ 38

2.6K 96 94
                                    

லரில் வேயப்பட்ட மணம் பரப்பும் பிருந்தாவனமென இருந்த அந்த மணமேடையில் தலையாட்டிக் கொண்டிருந்த பூங்கொத்துக்கள் போட்டி,போட்டு எட்டிப் பார்கிறது .. யாரவன் ?

தேவதைகளும் ரசிக்கும் தேன்மனம் கொண்டானவன் ,

தேக்கில் ஆன ஆறடித் தேகம் அதில் , ஒரு குவளைப்பாலில் ஒரு சொட்டுத்தேன் கலந்த தாழம்பூ நிறத்தைத் தன்னிறமாய் கொண்டானவன் ,

ஜனகனின் வில்வடிவமாய் மீசை கொண்டான் , அம்பையோ கால்வட்டமாக்கி புருவம் கொண்டானவன் ,

கருங்காந்தம் உருட்டி கண்மணி
கொண்டானவன் ,

தும்பைமலர் தந்த வெண்மை நிறத்தில் , பட்டு பூச்சிகள் மகிழ்ந்தளித்த ஆடை கொண்டானவன் ,

தென்றல் காற்றில் அசைந்தே ஆடும்
வயல் வெளியென அடர்ந்த கேசமதை கொண்டானவன்..

ஏனோ ? தன் கரம் கொண்டு சிகை கோதும் பேரழகுச் செயல் அதைக்கூடச் செய்ய மறந்துவிட்டான் அவன் ,

மழலையும் மயங்கும் குறுநகை கூட ஒளித்து வைத்தான் அவன் ,

மிகையில்லா நடை வேகம் கொண்டே மிடுக்கையும் மறைத்துவைத்தான் அவன் ,

உறவுகள் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று உறுத்தலுடனே மேடைவந்தான் அவன் ,

" காதலித்தவள் கரம் தரவில்லை என்றானதும் , பெரியவர்கள் கை காட்டியப் பெண்ணை மணக்க இருக்கும் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் இவர்கள் " , இப்படி ... தவித்தான் அவன் ...

" அவள் இல்லையென்றானதும் இவள் , என்று இங்கே நிற்கிறேனே , இது முறையா ? இது சரியா ? எனக்கு ஏன் இந்த நிலைமை ? மனதில் விரக்தியும் , குற்ற உணர்ச்சியுமாய் , மணமேடையில் வந்தமர்ந்தானவன் , அவன்தான் செந்தூரன் ,

இவனுக்காய் காத்திருந்த அய்யர் , ஹோமம் வளர்த்துப் பிடித்துவைத்த மஞ்சள் பிள்ளையாரை வணங்கி , சிவன் பார்வதி பூஜை முடித்து , நேர்மறை சக்திபெருக வேண்டி பூஜை செய்த மஞ்சள் காப்பை செந்தூரனின் வலக்கையில் கட்டிவிட்டு ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now