அனிச்சம் பூ 48

2.4K 101 42
                                    

ஜெயம் இல்லத்தின் தோட்டத்தில் மிதமான ஈரத்தில் , மலர நினைக்கும் மலர்கள் , சூரியனால் உலர இருக்கும் இலைகள் ,
இளைப்பாறிய மரக்கிளையை விட்டு இரைதேடக் கிளம்பும் பறவைகள் , என அதிகாலை அழகாய் நிகழ்ந்திருந்தது ,

ஜீவிகாவின் இமைப்பூ மெல்ல விரிந்து இன்றைய உலகைக்காண , அங்கே இருந்த கடிகாரம் அதிகாலை நேரமெனக் காட்ட , அதைப்பார்த்துத் திரும்பியவள் சோபாவில் துயிலில் இருக்கும் செந்துவைப் பார்க்க , அவனோ என் விடியல் இப்போதில்லை என்பதாய் அயர்ந்துரங்க ,

என்ன இது ? நேற்று இங்கேயே தூங்கிவிட்டேனோ ? , என்று யோசித்தவாறு எழுந்தவள் , தன் காலைப் பணிகள் முடித்துக் குளித்து , மணம் வீசும் மலர்செடியன வந்தவள் , ஹாலைப் பார்க்க அங்கே செந்து இல்லை , அவன் உறக்கம் கலைந்து எழுந்து சென்றிருந்தான் ,

காலையின் அழகை கண்களில் நிறைக்கத் தோட்டத்திற்க்கு சென்ற ஜீவி செவ்வரளி மலர்களையும் , நந்தியாவட்ட மலர்களையும் பரித்துத் தொடுத்து அதை பூஜை அறையில் தெய்வ படங்களுக்குப் போட்டு வணங்கிவிட்டு , காலை நேர பானத்திற்காய் பனங்கற்கண்டு சேர்த்த சிறு தானியகஞ்சி செ...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


காலையின் அழகை கண்களில் நிறைக்கத் தோட்டத்திற்க்கு சென்ற ஜீவி செவ்வரளி மலர்களையும் , நந்தியாவட்ட மலர்களையும் பரித்துத் தொடுத்து அதை பூஜை அறையில் தெய்வ படங்களுக்குப் போட்டு வணங்கிவிட்டு , காலை நேர பானத்திற்காய் பனங்கற்கண்டு சேர்த்த சிறு தானியகஞ்சி செய்து முடித்துத் திரும்ப ,

அங்கே செந்து சமயலறையின் முகப்புச் சுவரில் சாய்ந்து கைகளைக்கட்டிக் கொண்டு நின்றவாறு குறுஞ்சிரிப்போடு ஜீவியைப் பார்த்துக் கொண்டிருக்க ,

அங்கே அவனை எதிர்பாராத ஜீவி , சிறிதாய்த் துணுக்குற்று , குட்மானிங் மாமா எப்போ வந்தீங்க நான் பார்க்கவே இல்லை எனக்கூற ,

ஹிம் குட்மானிங் ஜீவிமா , இப்போதான் வந்தேன் , கார்டன்ல பார்த்தேன் உன்னைக் காணோம் , உன்னுடைய அறையிலும் இல்லை , அதுதான் சமயலறையில் இருந்து வந்த மணத்தை பிடித்துக் கொண்டு அப்படியே இங்கே வந்து பார்த்தால் நீ களத்தில் இறங்கிவிட்டாய்போல ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now