நேசமே சுவாசமாய்

1.9K 15 4
                                    


அனைவருக்கும் வணக்கம்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க.. உணர்விலே கலந்தவனே நாவலுக்கு கிடைத்த ஆதரவிற்கு மிக்க நன்றி.. அதில் , சஞ்சய் மற்றும் கலையை மட்டுமே மையமாக கொண்டு அவர்களின் காதல் , நேசம் , பிரிவு ,ஊடல் மற்றும் கூடலை முன்னிருத்தி இருக்கும் . அதில் , அவர்களோடு இணைந்து பயணித்திருந்த .. அனைவரின் மனதையும் நம் நாயகன் நாயகிக்கு போட்டியாக இடம் பிடித்திருந்த நந்தன் மற்றும் கீர்த்தி.. கலையின் ஹிட்லரான நரேன்.. அவனின் துணை மீரா.. சஞ்சய்யின் மறுபதிப்பாய் வலம் வரும் நிதின் மற்றும் மதுமிதா.. கனியின் செல்லமாக சஞ்சய்யின் பொறாமையை தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கும்.. அவளது அகில் கண்ணாவின் வானவில் வாழ்க்கை.. என்று அனைவரின் வாழ்வில் நேச மழையை மட்டுமே தூவி.. நிறைக்க செய்திருப்பவளால்.. தன்னவனுக்கு மட்டுமல்லாது.. அவர்களுக்கும் நேசமே சுவாசமாய்..  உணர வைப்பதற்காக.. மீண்டும் , உங்களுடன் பயணிக்க வருகிறாள் சஞ்சயின் கனி.. ‌

இவர்கள் அனைவரின் பற்றிய நிலையை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்த வாசக நண்பர்களின்  ஊக்கமே.. இதே தளத்தில் அதன் தொடர்ச்சியை நேசமே சுவாசமாய்  என்னும் தலைப்பில் புதிதாக தொடர முடிந்ததற்கு காரணம்.. என்பதையும் சந்தோஷத்தோடு உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். இதற்கும் தங்களின் ஆதரவுகளை தந்து.. என் நிறைகுறைகளை தயங்காமல் பகிர்ந்திட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

பல நட்புக்கள்.. தொடர்ந்து  பதிவுகளை பதிவிட வேண்டும் என்று பலமுறை கேட்டும் என்னால் அதை சரி வர செய்ய முடிந்ததில்லை..  கூடாது என்றில்லை.. பதிவிட முடியாத சூழலே காரணம்.. கண்டிப்பாக முடிந்தவரை தங்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.. வரும் எபிக்களில் குறைகள் இருப்பின் தவறாமல் சுட்டிக்காட்டவும்.. அப்பொழுதுதான் என் பிழைகளை திருத்திக் கொள்ள முடியும்.. ஸோ.. மறக்காம படிங்க.. உங்களுக்கு பிடிக்கலேனா.. படிக்காம தவிர்த்திடாதிங்க 🤪🤪🤪🤪.. அதை கமென்டில் போடுங்க😉😉😉.. நான் திருத்திக் கொள்பகிறேன்..

இதோ,  உணர்விலே கலந்தவனே நாவலின்  தொடர்ச்சியாக.. நேசமே சுவாசமாய்.. உணர்விலே கலந்தவனே நாவலை படித்திருந்தவர்களுக்கு.. புரிந்துக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.. புதிதாய் படிப்பவர்களாக இருந்தால் , இதை வாசித்தால்.. நன்கு புரியும்..

https://www.wattpad.com/story/278311873?utm_source=android&utm_medium=com.google.android.keep&utm_content=story_info&wp_page=story_details_button&wp_uname=kanidev86&wp_originator=w9kT9F43jKhelL1%2FqV5Q9cloYjC6Gk64G5VZiec0rGQh15Tpw8tcvVz4Gzi4jDDflqEj6y99wHxS%2Fuld5pjoJiFojSvC3eDGzwXmtvwu02VgU7xDXBYNPn6a736D6j%2BG

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now